வருகிறது வாட்சப்பின் புதிய ஆப்.. இது வேற லெவல் அப்ளிகேஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: முழுக்க முழுக்க வியாபார பயன்பாடுகளுக்காக மட்டும் 'வாட்சப் பிசினஸ்' என்ற அப்ளிக்கேஷனை வாட்சப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

நீண்ட நாட்களாக வதந்தியாக பரப்பப்பட்டு வந்த இந்த செய்தி தற்போது வாட்சப் நிறுவனத்தால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்சப் பிசினஸ் ஆப் மூலம் தொழில் சார்ந்த பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 வாட்சப் நிறுவனத்தின் வளர்ச்சி

வாட்சப் நிறுவனத்தின் வளர்ச்சி

தொடக்கத்தில் மிகச்சிறிய அப்ளிகேஷனாக அறிமுகப்படுத்தப்பட்டது வாட்சப் அப்ளிகேஷன். எளிமையான செயல்பாடு, அதீத வேகம் என பல காரணங்களால் இந்த ஆப் வேகமாக வளர ஆரம்பித்தது. இதையடுத்து வாட்சப் நிறுவனம் உலகின் மிக முக்கிய முன்னணி நிறுவங்களில் ஒன்றாக மாறியது. வாட்சப் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பார்த்து பல நிறுவனங்கள் அதே போல அப்ளிகேஷனை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது.

 வாட்சப்பை வாங்கிய பேஸ்புக்

வாட்சப்பை வாங்கிய பேஸ்புக்

வாட்சப்பில் வளர்ச்சியைக் கண்டு பல நிறுவனங்கள் அதை வாங்கும் முயற்சியில் இறங்கின. ஆனால் கடைசியாக பேஸ்புக் நிறுவனம் இந்த வாட்சப் நிறுவனத்தை வாங்கியது. பேஸ்புக்கின் கைக்கு சென்ற பின் வாட்சப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ஆப்பில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ் என பல வசதிகள் வாட்சப் புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட்டது.

 வருகிறது வாட்சப் பிஸ்னஸ் ஆப்

வருகிறது வாட்சப் பிஸ்னஸ் ஆப்

இந்த நிலையில் வாட்சப் நிறுவனத்தை வாங்கி இருக்கும் பேஸ்புக் நிறுவனம் , வாட்சப் பிசினஸ் என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளது. பல நாட்களாக வெறும் வதந்தியாக பரப்பப்பட்டு வந்த இந்த செய்தி தற்போது அந்த நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

 முழுக்க முழுக்க வியாபாரத்துக்கானது

முழுக்க முழுக்க வியாபாரத்துக்கானது

வாட்சப் வெளியிட இருக்கும் இந்த பிசினஸ் ஆப் முழுக்க முழுக்க வியாபாரத்துக்கானது என்று கூறப்பட்டுள்ளது. வாட்சப் போலவே இதிலும் புரோபைல் உருவாக்கிக் கொள்ளலாம். இது மற்ற நிறுவனங்களுக்கு பிசினஸ் புரோபைலாக காட்டப்படும். இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் இதில் இன்னும் தெரிவிக்கப்படாத பல சிறப்பம்சங்கள் இருப்பதாக வாட்சப் கூறியுள்ளது. இதன் லோகோவில் வாட்சப் போலவே, ஆனால், `பி` என்ற ஆங்கில எழுத்து பச்சை நிறத்தில் இடம் பெற்றிருக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Whatsapp is going to launch a new app.This app named whatsapp business will be utilised only for business.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற