For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை மிரட்டல் எதிரொலி: ஜெ.-சோபன்பாபு மகள் என கூறிய அம்ருதா தலைமறைவு?

ஜெயலலிதா- சோபன்பாபு மகள் தாமே என உரிமை கோரிய அம்ருதாவுக்கு கொலை மிரட்டல்கள் தொடருவதாக கூறப்படுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கொலை மிரட்டல் எதிரொலி: ஜெ.-சோபன்பாபு மகள் என கூறிய அம்ருதா தலைமறைவு?- வீடியோ

    பெங்களூர்: ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகள் என உரிமை கோரிய அம்ருதாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்ததால் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜெயலலிதாவின் தங்கை எனக் கூறிய பெங்களூரு ஷைலஜாவின் மகள் அம்ருதா. ஷைலஜா 2015-ம் ஆண்டு காலமானர்.

    இன்று சொந்தம்மா

    இன்று சொந்தம்மா

    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பெரியம்மா ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்கப் போவதாகவும் மாமா மகள் தீபாவுடன் கரம் கோர்த்துவிட்டதாகவும் அம்ருதா கூறினார். ஆனால் கடந்த சில மாதங்களாக தம்மை ஜெயலலிதா- சோபன் பாபு மகள் என உரிமை கோரி வருகிறார் அம்ருதா.

    ஹைகோர்ட் செல்ல அட்வைஸ்

    ஹைகோர்ட் செல்ல அட்வைஸ்

    இது தொடர்பாக அம்ருதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முறையிடவும் அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்.

    திடீர் தலைமறைவு

    திடீர் தலைமறைவு

    இதனிடையே ஜெயலலிதாவின் உறவினர்கள், நட்பு வட்டாரங்கள் அனைவருமே சொல்லிவைத்தாற் போல, ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்தது பெண் குழந்தை என கூறி வருகின்றனர். இந்த நிலையில் அம்ருதாவும் அவருக்கு ஆதரவாக இருக்கும் ஜெயலலிதாவின் உறவினர்களும் திடீரென தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    மிரட்டுவது யார்?

    மிரட்டுவது யார்?

    தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதைத் தொடர்ந்தே அனைவரும் தலைமறைவாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா உறவினர்களே அம்ருதாவுக்கு ஆதரவாக இருக்கும் போது கொலை மிரட்டல் விடுத்தது யார் என்பதும் உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Source said that, Amrutha who is claiming the daughter of Jayalalithaa has been receiving death threats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X