கேரளா லாட்டரி.. முதல் பரிசு பெற்ற நபர் யார்? திடீர் மர்மம்.. ரூ. 25 கோடியை அள்ளியது யாருங்க?
கோழிக்கோடு: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி முடிவுகள் வந்துள்ளன. டிக்கெட்டுகளை வாங்கி முடிவுக்காக ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு இறுதியாக இன்று அறிவிப்பு வந்துள்ளது.
ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி வயநாடு மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட சீட்டுக்கு கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற டிக்கெட்டை வயநாட்டில் உள்ள சுல்தான் பத்தேரியில் என்ஜிஆர் லாட்டரி விற்பனை செய்தது. பனமரத்தில் உள்ள எஸ்ஜி லக்கி சென்டர் மூலம் என்ஜிஆர் லாட்டரிகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.

ஏ எம் ஜினீஷ் என்பவர் எஸ் ஜி லக்கி சென்டரில் ஏஜென்சி எண் W402 உடன் இதன் முகவராக உள்ளார். பரிசு வென்றவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை என்று ஜினீஷ் கூறினார். அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாட்டரி முகவராக இருந்து வருவதாகவும், பம்பர் லாட்டரியில் தனது சீட்டு ஒன்று முதல் பரிசை வெல்வது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிக்கெட்டை வாங்கியவர் யார் என்று தெரியாது. இதனால்.. அடுத்த 30 நாட்களுக்குள் டிக்கெட் வாங்கியவர் அதை காட்டி பரிசை பெறலாம். அடுத்த 30 நாட்களுக்குள் டிக்கெட்டை வாங்கியவர் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதற்கிடையில், என்ஜிஆர் லாட்டரியின் முகவர் நாகராஜ், ஒரு மாதத்திற்கு முன்பே அந்த டிக்கெட் விற்கப்பட்டதாகக் கூறி மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். திருவோணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.25 கோடியும், வெற்றி பெற்ற 20 பேருக்கு இரண்டாம் பரிசாக தலா ரூ.1 கோடியும், மூன்றாம் பரிசாக ரூ.50 லட்சமும், நான்காம் பரிசாக ரூ.5 லட்சமும், ஐந்தாம் பரிசாக ரூ.2 லட்சமும், இறுதிப் பரிசாக ரூ. 500 வழங்கப்படும்.
அச்சிடப்பட்ட 8 மில்லியன் டிக்கெட்டுகளில் 71,28,218 டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. 8.5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகாமல் இருந்ததால், புதன்கிழமை நடைபெற்ற குலுக்கல் அன்று காலையிலும் டிக்கெட்டுகள் விற்பனை ஆகின. கடந்த ஆண்டு மொத்தம் 75,76,096 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
விலக்கு: இருப்பினும், அவர்களின் பரிசுத் தொகைக்கு நிறைய deduction செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில், லாட்டரி முகவர்களுக்கு 10% கமிஷன் பிடித்தம் செய்யப்படும். முதல் பரிசு வென்றவர் ₹ 25 கோடியை வென்றால், ₹2.5 கோடி கழிக்கப்படும். பின்னர், 6.75 கோடி ரூபாய் அரசுக்கு செல்லும்.. அதாவது 30% மாநில வரி விதிக்கப்படும்.
இந்த விலக்குகளுக்குப் பிறகு, பரிசுத் தொகை ₹15.75 கோடியாகக் குறையும். ₹5 கோடிக்கு மேல் வருமானம் உள்ள வெற்றியாளர்களுக்கு வருமான வரியில் கூடுதலாக 37% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். இந்த வழக்கில், கூடுதல் கட்டணம் ₹2.49 கோடியாக சரியும். மேலும், மொத்த வரியில் (₹9.24 கோடி) 4% சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் கூடுதலாக ₹36,99,000 சேர்க்கப்படும்.
மொத்தத்தில், ₹25 கோடி பரிசு வென்றவர் தோராயமாக ₹12.11 கோடி deductionயை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், அவர்களுக்கு இறுதித் தொகை ₹12.88 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் முதல் பரிசு பெற்றவர் யார் என்று தெரியாத காரணத்தால்.. கேரளாவில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications