For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தரகாண்ட் முதல்வர் யார்.. அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க டேராடூன் விரையும் மத்திய அமைச்சர்கள்!

By
Google Oneindia Tamil News

டேராடூன்: நடந்து முடிந்துள்ள உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுன்ட வெற்றி பெற்றது. ஆனாலும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் தோல்வியடைந்தார். இதையடுத்து முதல்வரை தேர்வு செய்ய பாஜக மூத்த தலைவர்கள் உத்தரகாண்ட் செல்லவுள்ளனர்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் என ஐந்து மாநிலத்துக்கும் தேர்தல் நடந்துமுடிந்து, புதிய அரசுகள் பதவியேற்க உள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும், மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜகவும் ஆட்சியைப் பிடித்தன. உத்தரப்பிரதேசத்தில் யோகி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.

குஜராத் தேர்தலுக்கு தயாராகும் பாஜக - தாமரை சின்னத்துடன் காவி நிற தொப்பியுடன் களமிறங்கும் தொண்டர்கள் குஜராத் தேர்தலுக்கு தயாராகும் பாஜக - தாமரை சின்னத்துடன் காவி நிற தொப்பியுடன் களமிறங்கும் தொண்டர்கள்

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட்

70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில், பாஜக 49 இடத்திலும், காங்கிரஸ் 19 இடத்திலும் வெற்றி பெற்றன. பாஜக பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. ஆனால் பாஜக முதல்வர் வேட்பாளராக புஷ்கர் சிங் தாமி அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் புஷ்கர் சிங் தாமி தோல்வியைத் தழுவினார். இதனா உத்தரகாண்டில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் யார்?

முதல்வர் யார்?

புஷ்கர் சிங் தாமி இந்த தேர்தலில் தோற்றாலும், அவரையே மீண்டும் முதல்வராக்கும் திட்டத்தை பாஜக யோசிப்பதாகவும், ஆனால் கடந்த காலங்களில் அவரின் பங்களிப்பு சிறப்பாக இல்லை என்று பாஜக தலைமைக்கு சில கருத்துகள் சென்றதால், அவருக்கு எதிராக முதல்வர் பதவிக்கு பலரது பெயரும் அடிபட்டுவருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல்

கடந்த பாஜக ஆட்சியில், மூன்று முறை முதல்வர்களை மாற்றியது பாஜக. திரிவேந்திர சிங் ராவத், தீரத் சிங் ராவத், புஷ்கர் சிங் தாமி என மூன்று முதல்வர்களை கண்டது உத்தரகாண்ட். அதனால் வலுவாலன் ஒரு தலைவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரியவருகிறது.

மத்திய அமைச்சர்கள்

மத்திய அமைச்சர்கள்

உத்தரகாண்ட் மாநில முதல்வரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் விரைவில் உத்தரகாண்ட் செல்லவுள்ளனர். புஷ்கர் சிங் தாமி தன்னுடைய வலுவான தொகுதியிலேயே காங்கிரஸ் கட்சியிடம் தோற்றிருப்பதால் அவரை மீண்டும் தேர்வு செய்ய பாஜக யோசிக்கிறது. ஆனால் நாட்டுப்பற்று, மோடிக்கு நெருக்கமானவர் என்ற காரணத்தால் மீண்டும் அவரை தேர்வு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

English summary
The BJP won the Uttarakhand Assembly elections with a majority. But the BJP's chief ministerial candidate failed. Following this, senior BJP leaders will travel to Uttarakhand to elect the next Chief Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X