இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

இடம் இல்ல அதான் தரையில படுக்க வச்சோம்... ஆபரேஷன் செய்த பெண்களை உதாசினப்படுத்திய மருத்துவமனை

By Shyamsundar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   ஆபரேஷன் செய்த பெண்களை உதாசினப்படுத்திய மருத்துவமனை- வீடியோ

   போபால்: மத்திய பிரதேச மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளுக்கு இடம் இல்லாததால் ஆபரேஷன் செய்யப்பட்ட பெண்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் முப்பதுக்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

   மேலும் இந்த பெண்களில் சில பேர் முக்கியமான ஆபரேஷன்கள் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் மிகவும் திமிராக வேறு பதில் அளித்து இருக்கிறது.

   இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் செயலுக்கு மத்திய பிரதேச சுகாதாரத்துறை கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

    தரையில் படுக்க வைக்கப்பட்டனர்

   தரையில் படுக்க வைக்கப்பட்டனர்

   போபாலில் சாட்னா நகரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் நேற்று மோசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண்கள் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். மேலும் வெளியே வரண்டாவில் அவர்கள் வெறும் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் பெட் கேட்டதற்கு அந்த மருத்துவமனை தரையில் விரிக்கும் தார் பாயை கொடுத்து இருக்கிறது.

    ஆபரேஷன் செய்த பெண்கள்

   ஆபரேஷன் செய்த பெண்கள்

   இந்த கொடுமையான செயல் காரணமாக 30 பெண்கள் தரையில் படுத்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும் யாருக்கும் போற்றிக் கொள்ள கூட போர்வை தரப்படவில்லை. தரைவிரிக்கும் தார் பாயை போர்வையாக பயன்படுத்தி இருக்கின்றனர். இதில் குழந்தை பெற்ற பெண்களும் அடங்கி இருந்தனர். மேலும் அங்கு இருந்த சில பெண்களுக்கு முதல்நாள் தான் பெரிய அளவில் ஆபரேஷன் நடந்து இருக்கிறது.

    திமிரான நிர்வாகம்

   திமிரான நிர்வாகம்

   இந்த பிரச்சனை வெளியே தெரிந்த போதும் கூட அந்த மருத்துவமனை நிர்வாகம் சுதாரிக்காமல் இருந்திருக்கிறது. இது குறித்து கேட்கும் போது ''நாங்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இப்போது படுப்பதற்கு பெட்டோ, அறையோ இல்லை. அதனால்தான் அனைவரும் தரையில் படுக்க வைக்கப்பட்டனர்'' என திமிராக பதில் அளித்து இருக்கிறது.

    நடவடிக்கை எடுக்கப்படுமா

   நடவடிக்கை எடுக்கப்படுமா

   தற்போது இந்த பிரச்சனை மத்திய பிரதேச சுகாதார துறைக்கு தெரிய வந்து இருக்கிறது. அந்த மருத்துவமனைக்கு கடும் கண்டனம் விடுத்து இருக்கிறது. விரைவில் அனைத்து மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமாம். அங்கு இருக்கும் பற்றாக்குறையை போக்கும் வகையில் விரைவில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் சுகாதாரத்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

   வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

   English summary
   Women made to lie on carpets after severe operation at Satna's Nagaur Community Health Centre in Madhya Pradesh. Health Centre has told that the room is being repaired so there were no space.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more