For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு அனைத்து விதங்களிலும் நெருக்கடி தர வேண்டும்- டெஸ்மான்ட் டுடு

Google Oneindia Tamil News

world should use all the screws on Sri Lanka, says Desmond Tutu
டெல்லி: தமிழர் மறுவாழ்வு மற்றும் மறு சீரமைப்பு தொடர்பாக உலக நாடுகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நெருக்கடிகளைத் தந்து அந்த நாட்டை சரியான பாதைக்குத் திரும்பச் செய்ய வேண்டும். அதில் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதும் ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என்று நோபல் பரிசு வென்றவரான தென் ஆப்பிரிக்க தலைவர் டெஸ்மான்ட் டுடு கூறியுள்ளார்.

டெல்லி வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது குறித்த விவாதம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு விரிவாகப் பதிலளித்தார் டுடு.

டுடு கூறுகையில், காமன்வெல்த் மாநாடு, இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நல்ல களமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. நிச்சயம் தமிழ் சமுதாயத்தினரின் உரிமைகள் குறித்தும், அவர்களது மறுவாழ்வு குறித்தும், மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விவாதிக்க முடியும், தீர்மானங்கள் போட முடியும்.

அதேசமயம், மாநாட்டை புறக்கணிப்பது என்ற முடிவும் கூட ஒரு நல்ல விஷயம்தான். இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை அர்ப்பணிப்பு உணர்வோடும், உண்மையாகவும் கடைப்பிடிக்கவில்லை என்ற கருத்து வரும்போது நிச்சயம் உலகநாடுகள் இலங்கை மீது அனைத்து விதமான நெருக்கடிகளையும் தர வேண்டும். அதில் மாநாடு புறக்கணிப்பும் ஒரு நடவடிக்கையாக இருக்கலாம்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள் இலங்கைக்கு நிறைய அறிவுறுத்த முடியும். எங்களது நாடுகளில் எழுந்துள்ள எதிர்ப்புகளையும் மீறி நாங்கள் வந்துள்ளோம். உங்களது கடமைகளை, நடவடிக்கைளை முறையாக உறுதியாக செய்யுங்கள். தமிழர்களின் நிவாரணத்திற்குத் தேவையானதை தாமதமில்லாமல் செய்யுங்கள் என்று இலங்கையிடம் நிர்ப்பந்திக்க காமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் கூற்றுகளுக்கும், அவர்களது கோரிக்கைகளுக்கும் இலங்கை அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும்.

மாநாட்டைப் புறக்கணிப்பது ஆக்கப்பூர்வமானதா என்று கூறுவதற்குப் பதில், இலங்கை தீவிரமாக செயல்பட அதற்கு அழுத்தம் கொடுக்க உதவும் என்றால் புறக்கணிப்பு முடிவும் சரியானதுதான் என்றார் டுடு.

English summary
South Africa’s Nobel Peace Laureate Archbishop Desmond Tutu is of the view that the CHOGM could be an opportunity for countries to convince Sri Lanka to adopt the path of reconciliation on the rights of the Tamil community in the island nation. Archbishop Tutu said, with a caveat, that a boycott of the CHOGM by the rest of the world could be a way of bringing peace in Sri Lanka. “If there are enough reasons to suggest that the Sri Lankan government has not been doing things with integrity, then yes, I think the world has to apply all the screws that it can and boycott could be one of them.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X