உ.பி.யின் 21-வது முதல்வராக பதவியேற்றார் சர்ச்சை சாமியார் யோகி ஆதித்யநாத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் 21-வது முதல்வராக சர்ச்சை சாமியார் யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராம்நாயக் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 312 இடங்களைக் கைப்பற்றி அபரா வெற்றி பெற்றது பாஜக. ஆனால் 312 பேரில் ஒருவரை முதல்வராக்காமல் எம்.பி.யாக இருக்கும் சர்ச்சை சாமியார் யோகி ஆதித்யநாத்தை தேர்வு செய்தது பாஜக.

Yogi Adityanath takes oath as Uttar Pradesh Chief Minister

இன்று லக்னோவில் நடைபெற்ற விழாவில் யோகி ஆதித்யநாத்துக்கு ஆளுநர் ராம்நாயக் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கேசவ் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றார்.

இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், பாஜக தலைவர் அமித்ஷா, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Yogi Adityanath, a five-time parliamentarian was sworn in as the new Chief Minister of Uttar Pradesh today.
Please Wait while comments are loading...