வேறு பெண்ணுடன் திருமணமான பிறகும் இளம்பெண் மீது ஆசைப்பட்ட இளைஞர்.. சம்மதிக்காததால் தீ வைத்து எரிப்பு!
ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த 19 வயது இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே கடந்த மாதம் இதே போன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றதில் பள்ளிச் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
தற்போது அதே மாதிரி மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் பலத்த தீக்காயமடைந்த இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றங்கள்
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக 4,28,278 குற்றங்கள் அரங்கேறியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி பார்த்தால் இந்த குற்றங்கள் சுமார் 26.35% அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 107 பெண்கள் மீது ஆசிட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. 1,580 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். 15 சிறுமிகள் கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளனர்.

விசாரணை
இவ்வாறு இருக்கையில் நேற்று மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் இருந்த நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தி தீ வைக்கப்பட்டுள்ளது. இதில் பலத்த தீக்காயமடைந்த இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

திருமணத்திற்கு மறுப்பு
இச்சம்பவம் குறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கும் ராஜேஷ் ராவத் எனும் இளைஞனுக்கும் நட்பு இருந்து வந்துள்ளது. இவ்வாறு இருக்கையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ராவத் இளம்பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ராவத்துக்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. இதன் காரணமாக இளம்பெண்ணின் வீட்டிலும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலம்
ஆனாலும் இளம்பெண்ணை ராவத் தொடர்ந்து பின்தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தொல்லை தாங்காமல் கடுமையான சொற்களால் இளம்பெண் ராவத்தை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராவத், இளம்பெண் வீட்டில் தனியாக இருக்கும்போது அவரை தாக்கி தீ வைத்துள்ளார். இதில் இளம்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது." என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இளம்பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்காக மாவட்ட நிர்வாகம் ரூ.1 லட்சத்தை வழங்கியுள்ளது.

கைது
இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில், கடந்த மாதம் சிறுமி ஒருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டதைப் போல என்னையும் கொன்றுவிடுவதாக ராவத் மிரட்டியதாக தெரியவந்துள்ளது. தற்போது தீ வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் இதே போல இளைஞர் ஒருவர் சிறுமியை காதலிக்க வலியுறுத்தி பின்தொடர்ந்துள்ளார். சிறுமி மறுக்கவே இளைஞன் சிறுமியை தீ வைத்து எரித்துள்ளார். இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications