For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்... வீடியோ எடுத்த இளைஞர்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றாமல், தங்களது செல்போனில் இளைஞர்கள் வீடியோ எடுத்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய பெண்ணின் பெயர் லைலா தங்கச்சன் என்பதாகும். 47 வயதான இந்தப் பெண், தனது வேலையை முடித்துக் கொண்டு நேற்று மாலை கேரள மாநிலம், முட்டபாலம் ரயில்வே கேட் பகுதிக்கு வந்தார். அப்போது அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்திருக்கிறது. அதை நிறுத்துவதற்காக கேட் கீப்பர் சிவப்புக் கொடி காட்டியிருக்கிறார்.

Youth fail to save woman’s life, but take pictures on mobiles

இதையடுத்து லாலா தங்கச்சன் ரயில்வே கேட்டை கடக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், வேகமாக வந்த ரயில் லாலா மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருந்த சில இளைஞர்கள், லாலாவை காப்பாற்ற முயற்சிக்காமல் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த பெண் அவர்களை நோக்கி உதவி கேட்டும், அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் படம் எடுப்பதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர்.

உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல், படம் எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு விபத்தோ அடிதடியோ எதுவென்றாலும் அதை தங்களின் செல்போனில் போட்டோவோ, வீடியோவோ எடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் கேரளாவில் நடைபெற்ற இந்த சம்பவமும் அதனை உணர்த்துகிறது.

In a shocking incident highlighting apathy to human life, two youths, who saw a woman fainting on the rail track on seeing an approaching train, failed to rush to her help, but instead took out their mobiles to capture the ghastly scene of the train ramming her.

English summary
In a shocking incident highlighting apathy to human life, two youths, who saw a woman fainting on the rail track on seeing an approaching train, failed to rush to her help, but instead took out their mobiles to capture the ghastly scene of the train ramming her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X