மச்சி சீக்கிரம் கல்யாணம் பண்ணு.. மாப்ள நீ முதல்ல பண்ணுய்யா.. ஹர்பஜன், ஜாகிர், யுவராஜ் கலகல!
பெங்களூரு: சீக்கிரம் கல்யாணம் பண்ணி செட்டிலாகுப்பா என்று யுவராஜ் சிங்குக்கு அட்வைஸ் செய்தார் ஜாகிர் கான். ஆனால், முதலில் நீங்க பண்ணுங்க என்று அவரைக் கலாய்த்துள்ளார் சமீபத்தில் திருமணமான ஹர்பஜன் சிங். டிவிட்டரில் இவர்களிடையே நடந்த உரையாடல் ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடிகை கீதா பஸ்ராவைத் திருமணம் செய்து இல்லறத்தில் காலடி எடுத்து வைத்தார் ஹர்பஜன் சிங். இவர்களது திருமணத்தில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்த நிலையில் டிவிட்டரில் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஜாகிர் கான் ஆகியோரிடையே கலகலப்பான ஒரு உரையாடல் நடந்துள்ளது.
|
சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பா
டிவிட்டரில் 33 வயதான யுவராஜ் சிங்குக்கு ஹர்பஜன் கொடுத்த அட்வைஸில் விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை கூறியிருந்தார். அதற்கு விரைவில் நடக்கும் என்று யுவராஜ் பதிலளித்திருந்தார்.

சீக்கரம் நண்பா
இந்த நிலையில் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரும், யுவராஜைப் போலவே பேச்சலராக இருக்கும் 37 வயது ஜாகிர் கான், யுவராஜுக்குக் கொடுத்துள்ள அறிவுரையில், சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ நண்பா.. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

முதல்ல நீ பண்ணு பாஸு
இதற்கு ஹர்பஜன் குசும்பாக பதிலளித்துள்ளார். அவர் போட்டுள்ள பதில் டிவிட்டில், ஹேய் நண்பா.. நானும் வாழ்த்துகளுடன் காத்திருக்கிறேன்.. நீயும் சீக்கிரம் திருமணம் செய்து கொள் என்று கூறியுள்ளார்.

நல்ல நண்பர்கள்
இந்த மூன்று பேருமே இந்திய அணியில் ஒரு காலத்தில் இணைந்து ஆடி பல சாதனைகளைப் படைத்தவர்கள். இப்போது ஹர்பஜன் சிங் மட்டுமே தட்டுத் தடுமாறி இந்திய அணியில் மீண்டும் ஆடி வருகிறார். யுவராஜ் சிங் ஓரம் கட்டப்பட்டு விட்டார். ஜாகிர்கான் ஓய்வே பெற்று விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications