For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் பலாத்காரம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார் என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பாதிப்புகள் குறித்த பதிவுகளை அரசின் ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்தது.

பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கூட்டம் அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடக்கவுள்ள நிலைமையில் தற்போது இந்த அதிர்ச்சி தரும் ஆய்வு ஆறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

rape

இளம் பெண்கள் பலாத்காரம்

அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் கற்பழிக்கப்படுகிறார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிபேர் கிட்டத்தட்ட 18 வயதிற்கு குறைவான இளம் பெண்களாகவே உள்ளனர்.

அமெரிக்க பெண்கள் பாதிப்பு

அனைத்து இனத்தை சேர்ந்த பெண்களும் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறபோது குறிப்பிட்ட சில பெண்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

27 அமெரிக்க இந்திய பெண்கள்

33.5 சதவிகிதம்பேர் கலப்பு இனத்தை சேர்ந்த பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். 27 சதவிகித அமெரிக்க இந்திய பெண்களும், ஹிஸ்பேனிக் இன பெண்கள் 15 சதவிகிதம், கருப்பு இனத்தவர்கள் 22 சதவிகிதம், வெள்ளை இனப்பெண்கள் 19 சதவிகிதத்தினரும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.

இந்த பலாத்கார சம்பவங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடக்கிறது.

ஆண்களும் பாதிப்பு

98 சதவிகித பலாத்கார சம்பவங்கள் ஆண்களாலேயே நடக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஆண்களும், சிறுவர்களும் இந்தபாதிப்புக்கு ஆளாகின்றனர். இதில் 71 ஆண்களுக்கு ஒருவர் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனராம்.

English summary
President Barack Obama shone a light on a college sexual assault epidemic, including rapes and gangrapes, that is often shrouded in secrecy, with victims fearing stigma, police poorly trained to investigate and universities reluctant to disclose the violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X