For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிலிப்பைன்ஸில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 60 பேர் படுகாயம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

தாவோ: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 60 பேர் படுகாயம் அடைந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே அமைந்துள்ள தாவோ நகரில் இரவுநேர சந்தைப் பகுதியில் அந்நாட்டு நேரப்படி இரவு வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

 10 dead, 60 injured in blast at night market in Davao City, Philippines

வார இறுதி நாள் என்பதால், அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது, திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 60க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

குறிப்பிட்ட இடத்தில் இருந்த கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இதனால், மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் நிலவுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஏராளமான போலீசார் உள்பட மீட்புப் படையினர் முழுவீச்சில் இந்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

எனினும், இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி என்றும், நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக, ஒற்றுமையுடன் இந்த பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
At least 10 people have been killed and 60 injured in an explosion at a market In Davao City
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X