Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவத்தினரின் வெறித்தனம்.. மொத்தம் 7 பேர்.. 13 வயது சிறுமி நாசம்.. அதிர்ந்து போன கொலம்பியா

13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதில் 7 ராணுவ வீரர்கள் கைதாகினர்

Subscribe to Oneindia Tamil

பொகடா, கொலம்பியா: உடம்பெல்லாம் ரத்தம்... மொத்தம் 7 பேர் சேர்ந்து 13 வயது பழங்குடி சிறுமியை நாசம் செய்துள்ளனர்.. அந்த 7 பேருமே ராணுவ வீரர்கள் என்பது அதிர்ச்சிகரமான தகவல் ஆகும்.. கொலம்பியாவில் இக்கொடுமை நடந்துள்ளது.

உலகமெங்கும் பரவி வரும் இந்த கொரோனா, கொலம்பியாவையும் விட்டு வைக்கவில்லை.. அதனால், வைரஸை தடுக்கும் பணியில் போலீசாரும், ராணுவ வீரர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

 13 year old girl colombia army soldiers gang rape, public protest

அதற்காக வீரர்கள் ஊர்களிலும், நகரங்களிலும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.. இந்நிலையில் வடக்கு கொலம்பியாவில் எம்பெரா பழங்குடியினத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஸ்கூலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அதனால் அந்த குழந்தையை தேடி பெற்றோரும், அந்த ஊர் மக்களும் தேடி சென்றனர்

அப்போதுதான் ஸ்கூலிலேயே அவள் இருப்பது தெரியவந்தது... வீட்டிற்கு அழைத்து செல்ல முயலும்போதுதான், ரத்தம் வழிந்து கிடந்ததை கண்டனர்.. அந்த குழந்தையால் நடக்கவே முடியவில்லை.. அதை பார்த்து பதறிய பெற்றோர், உடனடியாக பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.. பிறகுதான் கூட்டு பாலியல் பலாத்காரம் என்று டாக்டர்கள் சொல்லி பெற்றோருக்கு விஷயம் தெரிந்தது.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டது.. விசாரணையில் 7 ராணுவ வீரர்கள் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.. அவர்கள் 7 பேருமே தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொணடனர்.. அந்த நாட்டு வழக்கப்படி அதிகபட்ச தண்டனை 30 வருஷம் ஜெயிலாம்.. அதனால் 7 பேருக்குமே அந்த தண்டனை தரப்படும் என்கிறார்கள்.

இந்த கொரோனா காலத்தில் இப்படி ஒரு கொடுமையை ராணுவ வீரர்கள் நடத்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+