ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தல்? மறுக்கும் தாலிபன்கள்.. என்ன நடக்கிறது?
காபூல் : காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலரையும் தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாலிபன்களால் இந்தியர்கள் பலர் கடத்தப்பட்டிருக்கலாம் என ஊடக நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் இதனை தாலிபன்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை.
Recommended Video
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை தாலிபன்கள் கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள வெளிநாட்டு மக்களும், உள்நாட்டு மக்களும் அச்சத்துடன் தவிக்கிறார்கள்.
எப்படியாவது காபூலை விட்டு தப்பித்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் காபூல் விமான நிலையத்தில் பலரும் காத்துக்கிடக்கிறார்கள். ஒவ்வொரு நாடுகளாக தங்கள் நாட்டு மக்களை மீட்க விமானங்களை அனுப்பி வருகின்றன.

தாலிபன்கள்
தாலிபன்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்த உடனேயே, அமெரிக்கா தங்கள் நாட்டு படை வீரர்கள் பலரை உடனே ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியேற்றியது. இதேபோல் இங்கிலாந்து , இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை அழைத்துக்கொண்டனர்.

மீட்கும் விமானங்கள்
தற்போது காபூலில் உள்ள பல்வேறு வெளிநாட்டினர், தங்களை எப்படியும் தங்கள் நாடு மீட்கும் என்ற நம்பிக்கையுடன் காபூல் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு பயந்து அச்சத்துடன் தவிக்கும் அவர்களை விமானங்கள் மீட்டு வருகின்றன.

இந்தியர்கள் மீட்பு
இந்தியர்கள் இதுவரை மூன்று விமானங்களில் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழுலில் ஏராளமான இந்தியர்கள் காபூல் விமான நிலையத்தில் காத்துக்கிடக்கிறார்கள்.

காபூல் விமான நிலையம்
அப்படி காத்துக்கிடந்த 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலரையும் தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாலிபன்களால் இந்தியர்கள் பலர் கடத்தப்பட்டிருக்கலாம் என ஊடக நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் இதனை தாலிபன்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை. இந்தியர்கள் கடத்தல் செய்தியை தாலிபன்கள் இந்த தகவலை மறுத்துள்ளனர் எனினும் என்ன நடந்தது என்பதை விசாரித்து வருவதாகவும், தகவல்களை விரைவில் தெரிவிப்போம் என்று கூறியுள்ளனர்
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications