For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து மான்செஸ்டரில் பாப் இசை நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் தாக்குதல்-பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டரில் பாப் இசை நிகழ்ச்சியில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

மான்செஸ்டர்: இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

மான்செஸ்டரில் பாப் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வெடிகுண்டு ஒன்று வெடித்தது.

19 dead as blasts hit concert at Manchester Arena in England

இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது தீவிரவாதிகள் இந்த திடீர் தாக்குதலை நடத்தினார்கள். இதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வெளியான தகவலின் படி இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

19 dead as blasts hit concert at Manchester Arena in England

குண்டு வெடிப்பு நடந்த பகுதிக்கு அருகில் உள்ள விக்டோரியா ரயில் நிலையம் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

English summary
At least 19 persons have died and 50 injured after multiple blasts hit the Manchester Arena in England during a concert. The police are not ruling out the role of a suicide bomber.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X