For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க 'ஸ்பெல்லிங்' போட்டியில் இரு இந்திய வம்சாவளி மாணவர்கள் வெற்றி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய " ஸ்பெல்லிங்" போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிசென்றுள்ளனர். வாஷிங்டனில் லாப நோக்க மற்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் 'ஸ்கிரிப்ஸ் ஸ்பெல்லிங் பீ' என்ற நடந்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.

பதிமூன்று வயதான அன்சுன் சுஜோ மற்றும் 14 வயதான ஸ்ரீராம் ஹத்வார் ஆகிய இரு இந்திய வம்சாவளி மாணவர்களும், இந்த தேசிய சொல்லெழுத்துப் போட்டியில் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றில் வந்த வேறு 10 பேரை இவர்கள் தோற்கடித்து வெற்றி பெற்றனர்.

2 Indian-Americans winning Spelling Bee draws racial comments

ஸ்பெல்லிங் போட்டி

இந்த மாணவர்களில் ஒருவர் "ஸ்டிக்கோமித்தியா" ( stichomythia) என்ற சொல்லுக்கு எழுத்துக்களை சரியாகச் சொல்ல வேண்டியிருந்தது. இந்த வார்த்தை புராதன கிரேக்க நாடகங்களிலிருந்து வரும் சொல்லாகும்.

இதே போல மற்றொரு வெற்றி பெற்ற மாணவன் "பெயிடோன் " ( feuilleton) என்ற வார்த்தைக்கு எழுத்துக்களைச் சரியாகச் சொல்லவேண்டியிருந்தது. இந்த வார்த்தை பத்திரிகைகளுடன் வரும் ஒருவித இலவச இணைப்பைக் குறிக்கும் சொல்.

வெற்றிக்கோப்பை

வெற்றி பெற்ற இவர்களுக்கு கோப்பை பரிசளிக்கப்பட்டது. அந்தக் கோப்பையை இருவரும் இணைந்து உயர்த்திப் பிடித்தனர்.

அவர்களுக்கு வெற்றிப் பரிசாக, கோப்பையுடன், தலா 30,000 டாலர்கள் தரப்படுகிறது.

இந்தியாவம்சாவளி மாணவர்கள்

கடந்த 8 ஆண்டுகளாக இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும், கடந்த 17 ஆண்டுகளில் 13 போட்டிகளில் வென்றவர்களும் இந்திய வம்சாவளி மாணவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளில் கடந்த 7 ஆண்டகளாக அமெரிக்க வாழ் இந்திய மாணவர்களே முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

89 ஆண்டுகளாக ஸ்பெல்லிங் போட்டி

இந்தப் போட்டி கடந்த 89 ஆண்டுகளாக அமெரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியின் வரலாற்றில் இருவர் இணைந்து வெல்வது இது நான்காவது முறையாகும்.

நன்றி: பி.பி.சி. தமிழோசை

English summary
As two youngsters of Indian descent spelled history by jointly winning the coveted Scripps National Spelling Bee for a record seventh year in a row, they also stirred storm of racially charged comments in the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X