For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாத்தான் மீது கல் எறியும் சடங்கில் 20 லட்சம் இஸ்லாமியர் பங்கேற்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சவுதி: சாத்தான் மீது கல்லெறியும் இஸ்லாமிய வழிபாடு சவுதி அரேபியாவில் இன்று நடந்தது.

இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மினா என்ற இடத்தில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

மினாவில், சாத்தான் இருப்பதாக கருதப்படும் தூண்களின் மீது கற்களை எறிந்தனர். முன்னதாக அராஃபத் மலையில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள், அங்கிருந்து முஸ்தலிஃபா பகுதிக்கு சென்று கற்களை சேகரித்து, மினா பகுதிக்கு வந்தனர்.

இதற்காக பல பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், பைக், பஸ், கார்களிலும் மினாவுக்கு இஸ்லாமியர்கள் வந்திருந்தனர். இந்தியர்கள் உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் இந்த புனித நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் 7 லட்சம் பேர் அரபு நாடுகளை சேர்ந்தவர்களாகும்.

இங்கு வரும் பக்தர்கள் ஆடுகளை பலி கொடுத்து அதன் இறைச்சியை தேவைப்படுவோருக்கு வழங்குவது வழக்கம். காலத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம், பணத்தை செலுத்திவிட்டால் தேவைப்படுவோருக்கு இறைச்சியை சப்ளை செய்ய வாய்ப்பு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஹஜ் புனித யாத்திரையின் நிறைவாக சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Two million Muslims, including Indians, ritually stoned the devil today in the last major ritual of this year's Haj in Saudi Arabia, while fellow believers around the world celebrated Eid al-Adha. The stoning took place in Mina, about five kilometres east of the Grand Mosque in the holy city of Mecca.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X