For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

97 வயது விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: 2019-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 97 வயது மிக மூத்த விஞ்ஞானி ஜான் குட்எனஃப் உள்ளிட்ட 3 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அறிவியல், இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

2019 Nobel Prize in Chemistry announced for development of lithium-ion batteries

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, வில்லியம் கேலின், பீட்டர் ராட்கிளிப், கிரெக் செமன்சா ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிராண வாயுவை திசுக்கள் எப்படி எடுத்து கொள்கின்றன என்கிற ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. பேரண்டம் குறித்த ஆய்வுக்காக ஜேம்ஸ் பீப்லஸு, சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக மிசெல் மேயார் மற்றும் டிடியர் குயல்ஸ் ஆகியோருக்கு நேற்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜான் பி குட்எனஃப் (ஜெர்மனி), ஸ்டான்லி விட்டிகாம் (பிரிட்டன்), அகிர யோஷினோ (ஜப்பான்) மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 97 வயதில் நோபல் பரிசு பெறுகிறார் மிக மூத்த விஞ்ஞானி ஜான் பி குட்எனஃப். லித்தியம் ஐயன் ரீசார்ச்சபிள் பேட்டரியை கண்டுபிடித்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
2019 Nobel Prize in Chemistry awarded to John B. Goodenough, M. Stanley Whittingham and Akira Yoshino “for the development of lithium-ion batteries.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X