For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடக்கவே தெரியாத 6 மாத குழந்தை நீர் சறுக்கும் விளையாட்டில் உலக சாதனை!

Google Oneindia Tamil News

புளோரிடா: அமெரிக்காவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவைச் சேர்ந்த அந்தக் குழந்தையின் பெயர் சியாலா. இந்தக் குழந்தையின் பெற்றோர் தொழில்முறை நீர் சறுக்கு வீரர்கள் ஆவர். எனவே, தங்களது குழந்தையையும் அதே துறையில் சாதனை செய்ய வைக்க அவர்கள் முடிவெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து சியாலாவிற்கு பெற்றோர் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக இன்னும் நடக்கவே கற்றுக் கொள்ளாத அந்த 6 மாதக் குழந்தை, ஏரியின் குறுக்கே நீர் சறுக்கு பலகையை பிடித்தவாறு 209 மீட்டர் பயணம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து சியாலாவின் பெற்றோர் கூறுகையில், "படகு ஏரியின் மறுமுனையில் நின்று விட்டது. அப்படி இல்லாவிட்டால் இன்னும் அதிக தூரத்தை சியோலா கடந்திருப்பாள்" என பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பார்க்ஸ் போனிபை என்ற குழந்தை 6 மாதம் 29 நாட்கள் வயதில் நீர் சறுக்கில் ஈடுபட்டதே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அதனை 6 மாதம் 27 நாட்களில் அதாவது 48 மணி நேர வித்தியாசத்தில் சியாலா முறியடித்துள்ளார்.

English summary
Zyla of Polk City, Florida, took to the water Saturday and broke a decades-old record as the youngest water skier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X