யூடியூப் சேனல் நடத்தி 6 வயதில் ரூ. 55 கோடிக்கு வீடு வாங்கிய சிறுமி.. வாயை பிளக்கும் ரசிகர்கள்
சியோல்: 6 வயது யூ டியூப் பிரபலமான போரம் ரூ.55 கோடி மதிப்பிலான வீடு வாங்கி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த 6வயது சிறுமி போரம். இவர் யூடியூப்பில் மிகவும் பிரபலம் ஆவார். இவர் இரண்டு யூ டியூப் சேனல்களை நடத்தி வருகிறார். போரம் தனது ஒரு யூடிபூப் சேனல் மூலம் உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். மற்றொரு யூடியூப் சேனலில் குழந்தைகளுக்கான வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதன் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் போரம்மை பின் தொடர்கிறார்கள்.

இதில் பொம்மைகள் தொடர்பான விமர்சனங்கள் செய்யும் சேனலுக்கு 13. 6 மில்லியன் ரசிகர்களும், வீடியோ பிளாக் சேனலுக்கு 17.6 மில்லியன் ரசிகர்களும் அதாவது சந்தாதாரர்கள் உள்ளனர். இதன் மூலம் போரம்முக்கு 3 கோடியே 10 லட்சம் பேர் ரசிகர்களாக உள்ளனர்.
இதன் காரணமாக போரம்மின் யூடியூப் சேனல்களுக்கு மாதம் 21 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறதாம். இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே போரம்மின் பெற்றோர் ரூ.55 கோடி மதிப்பிலான 5 மாடி வீட்டினை தென்கொரியாவின் சியோல் நகரில் வாங்கியுள்ளனர். இந்த தகவலை தென்கொரியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் போரம்மை பாராட்டி வெளியிட்டுள்ளன.
யூடியூப் சேனல் நடத்தி சிறுமி போரம் 6வயதிலேயே 55 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு வாங்கி இருப்பதை உலக அளவில் பலரும் வியந்து போய் வாயை பிளந்து பாராட்டி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications