வெனிசுலாவில் வெடித்து சிதறிய ராணுவ ஹெலிகாப்டர்.. 7 ராணுவ வீரர்கள் பலி
வெனிசுலாவில் ராணுவ ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டதில், 7 ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
கராகஸ்: வெனிசுலாவில் ராணுவ ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டதில், 7 ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
வெனிசுலாவில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு எப்போது வேண்டுமானாலும் ராணுவ புரட்சி நடக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே இதற்கான முயற்சியில் அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஜுவான் காய்டோ ஈடுபட்டு வருகிறார்.

இவர் அந்நாட்டு ராணுவத்தின் சிறு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். இவர்கள் அங்கு ராணுவ புரட்சிக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அந்நாட்டில் ராணுவ ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்காக இன்று முக்கிய ராணுவ விழா ஒன்றை நடத்த அவர் திட்டமிட்டு இருந்தார். ராணுவ வீரர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு அவர்கள் முன் பேச மதுரோ திட்டமிட்டு இருந்தார். இதற்காக பல பகுதிகளில் இருந்தும் ராணுவ வீரர்கள் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தலைநகருக்கு வந்தனர்.
இந்த நிலையில் இதிலொரு ஹெலிகாப்டர் இன்று விபத்திற்கு உள்ளானது. கராகஸ் பகுதியின் எல்லையில் உள்ள மலை முகட்டில் இந்த் ஹெலிகாப்டர் மோதியது. கட்டுப்பாட்டை இழந்து இந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளது.
இந்த விபத்தில் 5 மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட 7 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் விபத்தா, இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications