For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கோழிக்கறி" சாப்பிடாதீங்க.. கிலோ 700 ரூபாயாம்.. அய்யோ, கோதுமை மாவு அதுக்கு மேல.. எங்கேன்னு பாருங்க

பாகிஸ்தான் நாட்டில் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஒரு கிலோ கோதுமை மாவு, கிலோ 160 ரூபாயாம்.. ஒரு கிலோ சிக்கன் 700 ரூபாயாம்.. பாகிஸ்தான் நாட்டில் இப்படியெல்லாம் விலை கடுமையாக உயர்ந்து கிலியை தந்து வருகிறது.

இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில், கடுமையான உணவு பஞ்சம் எற்பட்டுள்ளது.. எனவே, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இந்த நாடு எதிர்கொண்டு வருகிறது..

அதனால்தான், உணவு பொருட்களின் விலை உச்சத்துக்கும் எகிறி வருகிறது.. ஒவ்வொரு உணவு பொருட்களின் விலை உயர்வையும் மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்..

பொருளாதார நெருக்கடி: இருட்டில் அமைச்சரவை கூட்டம்.. இலங்கையாக மாறும் பாகிஸ்தான்..புது ரூல்சால் அவலம் பொருளாதார நெருக்கடி: இருட்டில் அமைச்சரவை கூட்டம்.. இலங்கையாக மாறும் பாகிஸ்தான்..புது ரூல்சால் அவலம்

 கோழி முட்டை

கோழி முட்டை

காரணம், பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவு கோதுமையாகும்.. ஆனால், அந்த கோதுமை மாவின் விலை உயர்ந்துவிட்டதால் கடுமையான அதிருப்தியில் மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.. கராச்சியில், ஒரு கிலோ கோதுமை மாவு ருபாய் 140 முதல் 160 வரை விற்கப்படுகிறதாம்.. மாவின் விலை அதிகரிப்பு, அதிக மின்சார செலவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை போன்ற காரணங்களால் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் கூறுகிறார்கள்.. அதனால்தான், நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவு பொட்டலங்களை அரசாங்கமே வழங்கி வருகிறது..

கோழிக்கறி

கோழிக்கறி

இந்த லிஸ்ட்டில் தற்போது கோழிக்கறியும் சேர்ந்து கொண்டுவிட்டது.. கோழியின் விலையில் 82.5 சதவீத உயர்வையும், முட்டையின் விலை 50 சதவீதம் வெங்காயத்தின் விலை 415 சதவீதம் சமீபத்தில் உயர்ந்துள்ளது.. இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மூட்டை ரூ.1500க்கும், 20 கிலோ மூட்டை ரூ.2800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் சிக்கன் விலை கிலோவுக்கு ரூ.300 வரை அதிகரித்துள்ளது... சில நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ சிக்கன் ரூ.440-480 ஆக இருந்தது.. ஆனால், இப்போது ஒரு கிலோ ரூ.650-700 ஆக உள்ளது.

 கோழி தானியம்

கோழி தானியம்

சிக்கன் விலை உயர்வுக்கு காரணம் அரசாங்கம்தான் என்கிறார்கள்.. இதுகுறித்து கோழிப்பண்ணை வியாபாரிகள் சொல்லும்போது, கோழிகளுக்கு தீவனம் சரியாக வழங்க முடியாத அளவிற்கு தீவனங்கள் விலை அதிகரித்துள்ளது.. சந்தையில் கோழிகளின் வரத்து பெரிதும் குறைந்து விட்டது.. அதே நேரத்தில் தேவையும் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன், 1500 முதல் 1800 ரூபாய் வரை கிடைத்த, 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை கோழி தானியம், தற்போது, 4,000 ரூபாய் வரை விலை போகிறது. அதோடு, போக்குவரத்து செலவும் அதிகரித்து, கடைசியில் கோழிக்கறி விலை உயரும் வரை வந்துவிட்டது என்கிறார்கள்.

 சிக்கன் வேணாம்

சிக்கன் வேணாம்

கோழிக்கறி விலை உயர்ந்துள்ள நிலையில், சிக்கன் யாரும் சாப்பிடாதீங்க, அது உடல் நலத்துக்கு நல்லது கிடையாது என்று மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரிக் பஷீர் சீமா கருத்து தெரிவித்து, சர்ச்சையில் சிக்கி உள்ளார்.. இதைக்கேட்டு அசைவப் பிரியர்கள் ஒருபக்கம் டென்ஷனாகி உள்ளனர் என்றாலும், பாகிஸ்தான் கோழிப்பண்ணை சங்கத்தினர் கொந்தளித்து போய்விட்டனர்.. சிக்கன் விலை இன்னும் உயரும் என்றும் சொல்கிறார்கள்.

English summary
700 per kg and pakistan food security minister asked people to quit eating chicken
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X