For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனா: ஜின்ஜியாங்’ தீவிரவாதிகள் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Google Oneindia Tamil News

8 Convicted Terrorists Executed In China
பீஜிங்: சீனாவில் டியனன்மென் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரவாதத் தாக்குதல் நடத்திய 8 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனன்மென் சதுக்கத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் குண்டுகள் நிரப்பிய காரை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோல், அவ்வப்போது ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து கண்ணில் பட்ட பொதுமக்களை எல்லாம்ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் வெட்டிக் கொன்றனர்.

இந்நிலையில், மேற்கூறிய தாக்குதல் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 8 பேருக்கு நேற்று சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஜின்ஜியாங் மாகானத்தை சேர்ந்த உரும்கி இன மக்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட தனிநாடு அமைக்கும் கோரிக்கையுடன் ஆயுதமேந்திய தீவிரவாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களில் அரசிடம் பிடிபடும் நபர்களுக்கு சீனாவின் கம்யூனிச ஆட்சி பெரும்பாலும் மரண தண்டனை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chinese state media said Saturday that eight convicted terrorists were executed in the far western region of Xinjiang, where ethnic conflicts have left dozens of people dead this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X