காதலர் தினத்திற்காக 100 கிமீ ஆகாயத்தில் பயணம்.. வானத்தில் ஹார்ட் வரைந்த விமானி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காதலர் தினத்திற்காக ஆகாயத்தில் ஹார்ட் வரைந்த விமானி

  லண்டன்: காதலர் தினத்திற்காக லண்டன் விமானி ஒருவர் வானத்தில் ஹார்ட் வரைந்து இருக்கிறார். இந்த விமானம் விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஆகும்.

  இதற்காக அவர் மொத்தம் 100 கிமீ பயணம் செய்து இருக்கிறார். இது வீடியோவாகவும் வெளியாகி இருக்கிறது.

  இந்தச் சம்பவம் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. இதற்கு எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

  எப்படி

  இந்த ஏர்பஸ் ஏ330 விமானம் லண்டனில் இருந்து காலை 11.30 மணிக்குக் கிளம்பி இருக்கிறது. 100 தூரம் சென்று கடலுக்கு மேலே 2 மணி நேரம் சுற்றி ஹார்ட்டின் வரைந்து இருக்கிறது. பின் அங்கு இருந்து வந்த இடத்திற்கே திரும்பி இருக்கிறார்கள்.

  ஏர் டிராபிக் வீடியோ

  அந்த நிறுவனத்தின் ஏர் டிராபிக் குழு இதுகுறித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறது. விமானி எப்படி கட்சிதமாக ஹார்ட் வரைந்தார் என்று கூறப்பட்டு உள்ளது. மற்ற விமானங்களில் மோதாமல் எப்படி ஹார்ட் வரைந்தார் என்று இதில் உள்ளது.

  காசு

  இது பிரச்சனை ஆகி இருக்கிறது. இவ்வளவு தூரம் சென்று, கடலுக்கு மேல் ஹார்ட் போட எவ்வளவு செலவு ஆகி இருக்கும். எவ்வளவு எரிபொருள் செலவு செய்து இருப்பார்களோ என்று இவர் கேள்வி கேட்டு இருக்கிறார். இதே கேள்வியை பலரும் கேட்டு இருக்கிறார்கள்.

  விளக்கம்

  இதற்கு அந்த நிறுவனம் இப்போது விளக்கம் அளித்துள்ளது. இது புதிய விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கும் விமானம் ஆகும். பயிற்சி அளிக்கும் போதே செய்யப்பட்ட சாதனை என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A Flight in London celebrates Valentine's Day in bizarre way. The Virgin Atlantic Flight company flight has drawn heart in sky for Valentine's Day.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற