For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ச்சீ இதுக்கு போய் அடிமையா? ஜு அதிகாரிகளை அதிர வைத்த கொரில்லா குரங்கு.. உலகம் எதை நோக்கி போகுதோ!

Google Oneindia Tamil News

சிகாகோ: அமெரிக்காவில் இருக்கும் கொரில்லா குரங்கு ஒன்று மனிதர்களை போலவே வித்தியாசமான விஷயம் ஒன்றுக்கு அடிமை ஆகி உள்ளதாம்.

21ம் நூற்றாண்டில் மனிதர்கள் பலர் அதிகம் அடிமை ஆன விஷயம் என்றால் அது டிஜிட்டல் ஸ்க்ரீன்தான். குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை எல்லோரும் போன் பயன்படுத்துவது அதிகம் ஆகி உள்ளது.

இன்ஸ்டா ரீல்ஸ் தொடங்கி பேஸ்புக் வரை நேரம் செல்வதே தெரியாமல் மக்கள் எந்நேரமும் போன் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து உள்ளது.

தேசிய கீதம் பாடி அசத்திய தான்சானிய நாட்டு அண்ணன் தங்கை - லட்சக்கணக்கான மனங்களை கவர்ந்த ரீல்ஸ் தேசிய கீதம் பாடி அசத்திய தான்சானிய நாட்டு அண்ணன் தங்கை - லட்சக்கணக்கான மனங்களை கவர்ந்த ரீல்ஸ்

அடிமை

அடிமை

பலர் காலையில் எழுந்தவுடன் போனை எடுத்தால் இரவு தூங்கும் வரை போனை நோண்டும் அளவிற்கு அடிமையாகி உள்ளனர். மருத்துவர்கள் பலர் கண்களில் கருவளையம் ஏற்படாமல் இருக்க, சரியாக யோசிக்க போன்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஆனாலும் பலரால் போன்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இது மனிதர்கள் மட்டுமின்றி தற்போது குரங்குகளுக்கும் பரவி உள்ளதுதான் பரிதாபம்.

பரிதாபம்

பரிதாபம்

ஆம் அமெரிக்காவில் சிகாகோவில் இருக்கும் லிங்கன் பார்க் விலங்குகள் சரணாலயத்தில் கொரில்லா குரங்கு ஒன்று போனுக்கு அடிமை ஆகி உள்ளது. 16 வயது நிரம்பிய அமேரா என்ற குரங்கு அங்கு செல்போன் பார்க்க அடிமை ஆகி உள்ளது. அந்த அமேரா குரங்கு சொந்தமாக போன் வைத்திருக்கவில்லை. அந்த குரங்கிடம் அங்கு கண்ணாடி ஸ்கிரீன் மூலம் போன் வீடியோக்களை காண்பித்துள்ளனர். முக்கியமாக குரங்கு வீடியோக்களை காண்பித்துள்ளார்.

அடிமை

அடிமை

இதை பார்த்த பலர் அங்கு வரிசையாக அந்த குரங்கிற்கு வீடியோவை காண்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி வரிசையாக பல வீடியோக்களை பார்க்க குரங்கு.. அதன்பின் மக்கள் யார் வந்தாலும் அவர்களிடம் போனை கேட்டு சைகை செய்ய தொடங்கி இருக்கிறதாம். யாராவது வீடியோ போட்டால் அங்கேயே பல மணி நேரம் உட்கார்ந்து பார்த்து வருகிறதாம். அந்த குரங்கு வீடியோ பார்க்காத நாட்களில் சரியாக சாப்பிடுவது இல்லை என்று கூறப்படுகிறது.

வீடியோ

வீடியோ

வீடியோ பார்ப்பதே அந்த குரங்கிற்கு வழக்கம். மற்ற நேரங்களில் கோபமாக இருக்கும். மற்ற ஆண் குரங்குகள், பெண் குரங்கிடம் கூட அது பேசாது. அந்த அளவிற்கு மோசமாக அமேரா குரங்கு நடந்து கொள்கிறது. அதை தற்போது கண்காணித்து வருகிறோம். அந்த குரங்கு கண்டிப்பாக போனுக்கு அடிமையாகி உள்ளது தெரிகிறது. இங்கே வரும் மக்களை அதனிடம் போனை காட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம் என்று சரணாலய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். குரங்கு ஒன்று இப்படி போனுக்கு அடிமையான சம்பவம் சரணாலய ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A Gorilla monkey in US addicted to phone in a zoo. அமெரிக்காவில் இருக்கும் கொரில்லா குரங்கு ஒன்று மனிதர்களை போலவே வித்தியாசமான விஷயம் ஒன்றுக்கு அடிமை ஆகி உள்ளதாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X