ஊதியம் இல்லமாமல் அவதி.. 24 ஆண்டுகளாக சவுதி பாலைவனத்தில் வசித்த மதுரை தமிழர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சவுதி: சவுதி அரேபியாவுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலை என்ற ஆசையில் சென்ற தமிழர் ஒருவர் சரிவர ஊதியம் வராததால் பாலைவனத்திலேயே 24 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அக்கா, தங்கைகளை கரைசேர்க்கவும், தன் குழந்தைகள் படிப்பு செலவு, திருமண செலவு, கடன் சுமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு கிடைக்கும் ஊதியத்தை சேர்த்து வைத்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இதற்காக குடும்பத்தை விட்டு சொந்த பந்தங்களை விட்டு பல கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்தில் பணியாற்றுகின்றனர் இந்திய இளைஞர்கள். அவ்வாறு பணியாற்றும் அவர்களுக்கு பேசப்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறதா என்றால் அது கேள்விக்குறியே.

சில தவறான ஏஜென்சி

சில தவறான ஏஜென்சி

வெளிநாடுகளுக்கு செல்லும் போது அனைவரும் கடைபிடிக்க வேண்டியது பாதுகாப்பு. அதற்காக அங்கு பணியாற்றும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை நம்பி செல்வோர் பாதுகாப்பை பெறுகின்றனர். ஆனால் தவறான ஏஜென்சிகளை நம்பி அரபு நாடுகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரு வேளை உணவு

ஒரு வேளை உணவு

என்ஜீனியரிங் வேலை, சூப்பர்வைசர் வேலை என்றும், கை நிறைய சம்பளம் என்றும் ஆடை காட்டி பல்வேறு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சரிவர ஊதியம் வழங்கப்படாமலும், படித்த படிப்புக்கு குறைவான பணிகளில் ஈடுபடுத்துவதும், ஒரு வேளை உணவு மட்டுமே கொடுப்பது, விடுப்பு கொடுக்காமல் இருப்பது உள்ளிட்ட கொடுமைகள் அரங்கேறுகின்றன.

மீள்பவர்கள் உண்டு

மீள்பவர்கள் உண்டு

அந்த வகையில் அவ்வாறு மிதிப்பட்டு, உதைப்பட்டு பலர் சொந்த நாடுகளுக்கு செல்வதும், பலர் அங்கேயே கிடப்பதும் வாடிக்கைதான். அந்த வகையில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி சென்றவர் தற்போது எத்தகைய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதை பாருங்கள்.

குமரி மாவட்டத்தினர்

குமரி மாவட்டத்தினர்

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் ஞான பிரகாசம் ராஜமரியான். 1994 -ஆம் ஆண்டு சவுதிக்கு சென்ற இவர், அங்கு உள்ள பண்ணை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அங்கு அவருக்கு சரியான ஊதியம் வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி சவுதியிலுள்ள பாலைவன பகுதியில் சட்டவிரோதமாக வசிக்க தொடங்கியுள்ளார் ராஜமரியான்.

தமிழகத்துக்கு வரவில்லை

தமிழகத்துக்கு வரவில்லை

ராஜமரியான் 1994- ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருமுறை கூட தமிழகத்துக்கு திரும்பவில்லை. இருப்பினும் தன் குடும்பத்துக்குத் தொடர்ந்து பணம் அனுப்பி வந்துள்ளார். தற்போது, ஞான பிரகாசத்துக்கு 52 வயதாகிறது. தற்போது சமூக அமைப்பின் உதவியுடன் தமிழகம் திரும்பவுள்ளார். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A person lived in Saudi desert for 24 years illegally Gnana prakasam from Tamilnadu has gone to Saudi for job. He was not given payment proper. So for 24 years he has lived in desert illegally. Now he is coming to TN with the help of social activist.
Please Wait while comments are loading...