மாஸ்கோ அருகே ரஷ்யா விமானம் விபத்து.. 71 பேர் பலி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: 71 பயணிகளுடன் சென்ற ரஷ்யா விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் பயணித்த பயணிகள் அனைவரும் மரணம் அடைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விமானம் அங்கு இருக்கும் கிராமம் ஒன்றில் விழுந்துள்ளது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது அங்கு மீட்பு அதிகாரிகள் விரைந்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானம்

விமானம்

இது ரஷ்யாவை சேர்ந்த ''சரடோவ் ஏர்லைன்ஸ்'' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஆகும். இதன் பெயர் ஆன்டோனோவ் ஏஎன்-148 ஆகும். மாஸ்கோவில் இருந்து அரசாக் என்ற நகரம் நோக்கி இந்த விமானம் சென்றுள்ளது.

இல்லை

இல்லை

ஆனால் புறப்பட்ட சில நொடியிலேயே ரேடாரில் இருந்து காணாமல் போய் உள்ளது. பின் அந்த விமானம் அருகில் இருக்கும் 'ஆர்குனோவா' கிராமத்தில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்ட்டது.

பார்த்தார்கள்

பார்த்தார்கள்

இந்த விமானம் நொறுங்கி விழுந்ததை மக்கள் நேரில் பார்த்து இருக்கிறார்கள். இந்த விமானத்தில் மொத்தம் 71 பேர் பயணம் செய்தனர். இதில் 65 பேர் பயணிகள். 6 பேர் விமான பணியாளர்கள்.

மரணமா ?

மரணமா ?

இந்த மோசமான விபத்தில் 71 பேர் பலி ஆகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது அங்கு மீட்புக்குழுவினர் சென்றுள்னனர். மீட்புப்பணிகளை தீவிரமாக நடந்து வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A plane gets accident in Russia's Moscow with 71 passengers. It went on broad with 71 passengers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற