For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடங்கிய 2ஆம் கட்ட யுத்தம்! “எங்கள் இராணுவத்தை நம்புங்கள், அது மிகவும் வலிமையானது”உறுதியுடன் உக்ரைன்

Google Oneindia Tamil News

கீவ் : உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உக்ரைனில் இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளதாகவும் எங்கள் ராணுவத்தை நம்புங்கள் அது மிகவும் வலிமையானது என தலைமை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Recommended Video

    Ukraine மீது திடீரென தாக்குதலை தீவிரப்படுத்திய Russia ராணுவம்

    உக்ரைன் நாட்டின் ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்கள் கடந்து விட்ட நிலையில் போரின் தாக்கம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா பல உக்ரேனிய நகரங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது

    உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய ஷெல் தாக்குதலில் திங்களன்று நான்கு பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய ஆளுநர் பாவ்லோ கிரிலென்கோ தனது டெலிகிராம் சேனலில் தெரிவித்துள்ளார்

     நள்ளிரவில் குண்டுமழை! திடீரென ஆக்ரோஷமான ரஷ்ய ராணுவம்! ஓயாத தாக்குதலால் உக்ரைன் மக்கள் திக்திக் நள்ளிரவில் குண்டுமழை! திடீரென ஆக்ரோஷமான ரஷ்ய ராணுவம்! ஓயாத தாக்குதலால் உக்ரைன் மக்கள் திக்திக்

    உக்ரைன் போர்

    உக்ரைன் போர்

    இந்நிலையில்,கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்யா முயற்சித்துள்ள நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான படைகளையும், டாங்குகள், ஏவுகணைகள் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது. டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்திய மையமாக வைத்து தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது குறிப்பிடத்தக்கது. இவற்றை சுதந்திர பகுதிகளாக விளாடிமிர் புடின் அறிவித்ததும் கவனிக்கத்தக்கது.

    இரண்டாம் கட்ட போர்

    இரண்டாம் கட்ட போர்

    இதற்கிடையில் உக்ரைனில் இரண்டாம் கட்ட போர் ஆரம்பமாகியுள்ளதாகவும், "எங்கள் இராணுவத்தை நம்புங்கள், அது மிகவும் வலிமையானது," என்று உக்ரைனின் படைகள் தாக்குதலைத் தடுக்க முடியும் என்று உக்ரேனியர்களுக்கு உறுதியளித்து, டெலிகிராமில் உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் கூறியுள்ளார். கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் புதிய தாக்குதலைக் குறிப்பிடும் வகையில், "இரண்டாம் கட்ட யுத்தம் தொடங்கிவிட்டது" என்று உக்ரைனின் ஜனாதிபதி தலைமைத் தலைவர் திங்களன்று கூறினார்.

    ஏவுகணை தாக்குதல்

    ஏவுகணை தாக்குதல்

    மேற்கு உக்ரைன் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு குழந்தை உட்பட மேலும் 11 பேர்காயமடைந்து உள்ளதாகவும் லிவிவ் நகர மேயர் ஆண்ட்ரி சடோவி தெரிவித்துள்ளார். ரஷ்யா நான்கு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் மூன்று உக்ரைன் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை தாக்கியது என்றும், லிவிவ் பிராந்திய பகுதி ஆளுநர் மாக்சியம் கோஸ்ய்ட்ஸ்கேய் குறிப்பிட்டுள்ளார்.

    பீரங்கிகள் குவிப்பு

    பீரங்கிகள் குவிப்பு

    இதேபோல் உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியில் தரை வழித் தாக்குதலுக்காக ரஷ்யா ராணுவம் பீரங்கிகள் உள்பட தனது பிற திறன்களை அதிகரித்து வருவதாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷ்ய போர் பிரிவுகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 65ல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    English summary
    55 days since Russia's war on Ukraine. The second phase of the war in Ukraine has begun and trust our military, it is very strong a senior ukraine official said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X