வானில் திடீரென தோன்றிய இளஞ்சிவப்பு நிறம்.. பார்க்கவே விசித்திரமா இருக்கே.. இப்படி ஒரு காரணமா?
கான்பெரா: இந்த உலகம் பல அதிசயங்களை உள்ளடக்கியது. இயற்கையை மனிதன் எந்த அளவிற்கு புரிந்துகொள்கிறானோ அந்த அளவிற்கு அதிசயங்களை அவன் காண்கிறான். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நள்ளிரவில் திடீரென வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்துள்ளது. இதை பார்த்த மக்கள் வெளிகிரகவாசிகள்தான் பூமிக்கு படையெடுத்துள்ளதாக குழம்பிப்போயினர்.
ஆனால் இதற்கான காரணம் முற்றிலும் வேறானது. கஞ்சா செடிகள் செழிப்பாக வளர பல்வேறு ஒளி கதிர்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஒளியைத்தான் உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் கஞ்சா மருத்துவ பயன்பாட்டிற்காக வளர்க்கலாம் என அந்நாட்டு அரசு கடந்த 2017ம் ஆண்டு அனுமதியளித்திருந்து. இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான் ஆஸ்திரேலியாவில், வடக்கு விக்டோரியா நகரமான மில்டுராவில் உள்ள 'கேன் ' மருத்துவ குழுவின் ஆய்வு கூடத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு கூடத்தின் மேல்தான் இளஞ்சிவப்பு ஒளி தெரிந்துள்ளது.

வானம்
இதை கண்ட அந்த பகுதி மக்கள் ஏலியன்கள் உலகத்திற்கு படையெடுத்துவிட்டதாகவும், உலகம் அழிந்துகொண்டிருப்பதாகவும் கருதினர். சிலர் அவர்களது உறவினர்களுக்கு போன் செய்து இது குறித்து பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக தனது தந்தையிடம் தொலைப்பேசியில் அழைத்து பேசியதாகவும், அவர் உலகம் அழிந்து கொண்டு வருகிறது என்று கூறியதாகவும் சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

என்ன காரணம்
பின்னர் இந்த விவகாரம் மெள்ள நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழத்தொடங்கின. ஆய்வாளர்கள் இது குறித்து விரிவாக ஆய்வு நடத்த தொடங்கினர். ஏலியன்கள் குறித்த கதைகளும் இத்துடன் வேகமாக பரவின. இதனையடுத்து பேட்டியளித்த கேன் குரூப் லிமிடெட்டின் மூத்த தகவல் தொடர்பு மேலாளர் ரைஸ் கோஹன் "கஞ்சா செடிகளுக்கு அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்க வெவ்வேறு ஸ்பெக்ட்ரம் ஒளி தேவை என்று விளக்கினார்.

ஸ்பெக்ட்ரம் ஒளி தேவை
எனவே நாங்கள் இளஞ்சிவப்பு நிற ஒளியை பயன்படுத்துகிறோம் என்று" கூறினார். மேலே குறிப்பிட்டதைப் போல இது இயற்கையான நிகழ்வு ஏதும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இந்த இளஞ்சிவப்பு நிற ஒளி தொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் பலர் பகிர்ந்து அது குறித்து தங்களது கற்பனைகளை எழுதி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications