பெத்த மகன், மகளையே காதலித்து திருமணம் செய்த தாய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெக்சாஸ்: அமெரிக்காவில் டெக்சாஸ் பெண்மணி ஒருவர் தனது சொந்த மகனையும், மகளையும் திருமணம் செய்து இருக்கிறார். 44 வயது நிரம்பிய 'பேட்ரிகா ஸ்பான்' என்ற இந்த பெண் அவரது குழந்தைகளை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.

இதன் காரணமாக தற்போது போலீசார் இவரை கைது செய்து இருக்கின்றனர். மேலும் இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் முறைப்படி பேட்ரிகா ஸ்பான் தான் குழந்தைகளுக்கு தாய் என ஆவணங்களில் இல்லாததால் இவர் வழக்கில் இருந்து தப்பிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குழந்தைகளை பிரிந்தார்

குழந்தைகளை பிரிந்தார்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பேட்ரிகா ஸ்பான் என்ற பெண்மணி தனது கணவர் 'ஸ்பான்' என்ற நபரை 4 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்தார். இதையடுத்து அவர்களுக்கு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை தத்து கொடுக்கப்பட்டது. ஸ்பானின் தாய் முறைப்படி குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தார்.

சொந்த மகளையே மணந்தார்

சொந்த மகளையே மணந்தார்

பேட்ரிகா ஸ்பான் தன் குழந்தைகளை கடந்த இரண்டு வருடமாக பார்க்காமல் இருந்திருக்கிறார். 2015ம் ஆண்டின் இறுதியில் பேட்ரிகா தன் மகள் மிஸ்டி ஸ்பானை சந்தித்த உடன் காதலிக்க தொடங்கி இருக்கிறார். பின் இருவரும் முழு சம்மதத்தோடு திருமணம் செய்து இருக்கிறார்கள். மேலும் யாருக்கும் தெரியாமல் 2016ம் ஆண்டு இறுதி வரை ஒன்றாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

மகனுடனும் திருமணம்

மகனுடனும் திருமணம்

பேட்ரிகா தனது மகனையும் திருமணம் செய்து இருக்கிறார். தனது மகனை திருமணம் செய்யும் போது அவருக்கு 43 வயது நிரம்பி இருந்தது. மகனுக்கு 18 வயது மட்டுமே இருந்தது. மேலும் இந்த திருமணம் நடந்த காரணத்தால் பேட்ரிகாவுக்கும், மிஸ்டிக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

10 ஆண்டுகள் சிறை தண்டனை

தற்போது இந்த விஷயம் அந்த குழந்தைகளின் பாட்டி மூலம் போலீசுக்கு தெரிந்து இருக்கிறது. தற்போது டெக்சாஸ் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டை கொடுத்துள்ளது. ஆனால் அந்த குழந்தைகள் மூவரும் அவர்கள் பாட்டியல் முறையாக தத்து எடுக்கப்பட்டு இருப்பதால் பேட்ரிகா அதிகாரப்பூர்வ தாய் இல்லை எனப்படுகிறது. இதன் காரணமாக இவர் மீதான தண்டனை நீக்கப்பட வாய்ப்புள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A woman in America married her own children illegally. She got married to her daughter and her son. She has received a 10-year sentence.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற