Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தளபதி விஜய் என்ன பார்த்துதான் ஆடியிருப்பார்...! தென்ஆப்பிரிக்காவில் அஸ்வின் கலகல...!

Subscribe to Oneindia Tamil

ஜோகன்னஸ்பர்க்: மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தான் ஆடிய ஸ்டெப்பை பார்த்து இன்ஸ்ஃபையர் ஆகித்தான் தளபதி விஜயே டான்ஸ் ஆடி இருப்பார் என இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய கலகலப்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Recommended Video

    தளபதி விஜய் என்ன பாத்துதான் ஆடியிருப்பார்...! தென்ஆப்பிரிக்காவில் அஸ்வின் கலகல -வீடியோ

    இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்தியா மிக வலுவான நிலையில் உள்ளது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. 122 ரன்களுடனும் ரகானே 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியின் கையில் 7 விக்கெட்கள் மீதம் இருந்ததால் அதிக ஸ்கோர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை

    ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை

    போட்டி நடைபெற்று வரும் செஞ்சூரியன் மைதானத்தில் திங்கட்கிழமை காலை முதலே மழை வெளுத்து வாங்கியது. இதனால் இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதுமாக ஆட முடியாமல் போனது. இதனால் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது, ரசிகர்களும் மிகவும் அப்செட் ஆனார்கள். இன்று ஒரு வேலை மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால் இந்தியா நல்ல ஸ்கோர் செய்து ஆட்டத்தை இரண்டாம் நாளிலேயே தன் பக்கம் திருப்பியிருக்கும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்ததுதான் மிச்சம்.

    பிசிசிஐ வெளியிட்ட வாக் அண்ட் டாக்

    பிசிசிஐ வெளியிட்ட வாக் அண்ட் டாக்

    இந்நிலையில் மழை காரணமாக ஏமாற்றமடைந்தாலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருண்ட நாளை பிரகாசமாக்க, டான்ஸ், கம்பேக் இன்னும் பலவற்றை பேசப்போகும், ஃபன் டாக் அண்ட் வாக் என குறிப்பிட்டு , இந்திய அணியின் தற்போதைய அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துள் தாக்கூரும் கலகலப்பாக உரையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

    கலகலப்பான அஸ்வின்

    கலகலப்பான அஸ்வின்

    கலகலப்பான இந்த வீடியோவில் அஸ்வின் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள், அதிலிருந்து மீண்டு வந்த விதம் குறித்தும், தனது கிரிக்கெட் பயணம் குறித்தும் ஷர்துலின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அஸ்வினிடம் ஷர்துல், நான் உங்களுடைய நிறைய நடன வீடியோவை பார்த்துள்ளேன் எனவும், அது எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய நடன வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது என கூறினார்.

    இன்ஸ்ஃபையர் ஆன விஜய்

    இன்ஸ்ஃபையர் ஆன விஜய்

    மேலும் மற்ற வீடியோக்கள் எதுவும் உங்களுடைய அளவிற்கு சிறப்பானதாக இல்லை, நீங்கள் இதற்காக எதுவும் பயிற்சி எடுக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு மாஸ்டர் வாத்தி கம்மிங் ஸ்டெப்பை போட்டுக் கொண்டே ஜாலியான ரவிச்சந்திரன் அஷ்வின்,"என்னுடைய வாத்தி கம்மிங் வீடியோ தான் அந்த அளவிற்கு வேகமாக வைரலானது, அதில் அந்த ஒரு ஸ்டெப் தான் மிகவும் ஹிட் அடித்தது, ஒருவேளை நடிகர் விஜய் என்னை பார்த்து தான் இன்ஸ்பையராகி இந்த ஸ்டெப்பை போட்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன் கூறினார். தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+