Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காபூல் ஏர்போர்ட் அருகே ஆப்கனைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்களை தடுத்து நிறுத்தி தாலிபான்கள் அடாவடி

Subscribe to Oneindia Tamil

காபூல் விமான நிலையத்திற்கு செல்ல முயன்றபோது சுமார் 140 சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் தாலிபான்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய உலக மன்றத்தின் தலைவர் புனித் சிங் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பிறர் உட்பட, 200 க்கும் மேற்பட்டோர், வியாழக்கிழமை காலைக்குள் ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வர திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்து அவர்கள் இந்தியா அழைத்து வர திட்டமிடப்பட்டருந்தது. ஆனால், தாலிபான்கள் விமான நிலையத்தின் அருகே, இவர்களை தடுத்துள்ளதாக இந்திய உலக மன்றம் தெரிவித்துள்ளது.

தாலிபான்கள் விருப்பம்

தாலிபான்கள் விருப்பம்

ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்லாமிய எமிரேட் என மாற்றப்பட்டுள்ள ஆப்கனிலேயே தொடர்ந்து இருந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று தலிபான் வலியுறுத்தி வருகிறது. எனவே அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து தப்பிச் செல்வோரை தடுக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், தாலிபான்களால் கொடுமைக்குள்ளாக்கப்படுவார்கள் அல்லது மதம் மாற கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் நிலவுவதால், அவர்கள் இந்தியா வர திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.

இந்தியா முயற்சி

இந்தியா முயற்சி

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்ற விமானங்களை இயக்க தொடங்கியதில் இருந்து இந்தியா மொத்தம் 565 நபர்களை வெளியேற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்திய தூதரகத்தின் 175 பணியாளர்கள், 263 பிற இந்தியர்கள் மற்றும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உட்பட 112 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் அடங்குவர்.

ஏர்போர்ட்டில் விமானங்களால் டிராபிக் நெரிசல்

ஏர்போர்ட்டில் விமானங்களால் டிராபிக் நெரிசல்

தாலிபான்களால் பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அவ்வளவு எளிதாக யாரும் தப்ப முடிவதில்லை. இது தவிர பல நாட்டு விமானங்களும் காபூலுக்கு வந்து செல்வதால், அங்கு பெரும் டிராபிக் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து நாட்டு விமானங்களும், தாமதமாக கிளம்பிக் கொண்டுள்ளன.

Recommended Video

    ஆப்கானில் கோடி ரூபாய் மதிப்புள்ள யுத்த கழிவுகள் | Habeeb song| Sajeesh chat p-02| Oneindia Tamil
    அகதிகள் பிரச்சினை

    அகதிகள் பிரச்சினை

    இதனிடையே, பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டோமினிக் ராப் அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறுவதற்கான கெடு தேதியான 31ம் தேதிக்குப் பின், நாட்டின் எல்லைகளை தலிபான்கள் மூட முயற்சி செய்ய வாய்ப்பு உள்ளது. ஆப்கனின் எல்லைப் பகுதி மிகவும் நீளமாக உள்ளது. எனவே, அந்த நாட்டை வெளியுலகிலிருந்து துண்டிக்கும் தலிபான்களின் முயற்சி தோல்வியடையும். எனவே, நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைய ஏராளமானோர் முயல்வர். இது, மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+