ஆட்டத்தை ஆரம்பித்த தாலிபான்கள்.. மீடியாவில் பணியாற்ற பெண்களுக்கு அதிரடி தடை.. அதிர்ச்சியில் மக்கள்
ஊடகங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது
காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபிறகு, பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றுவதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.. இதனால் தாங்கள் பணியாற்றும் இடத்துக்கு செல்ல முடியாமல் பெண் பத்திரிகையாளர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்..!
Recommended Video
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தலிபான்... இந்த விவகாரம் உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கடுமையான மனித உரிமை மீறல் சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது..
பெண்கள் பலவிதமான அடக்குமுறைகளுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பயந்து, அந்த நாட்டில் இருந்து தப்பித்து ஓடவும் வழிவகுத்து விட்டது... "யாரும் பயப்பட தேவையில்லை, அமைதியான நல்ல ஆட்சியை தருவோம்" என்று தாலிபன்கள் நம்பிக்கை தந்தாலும், அதை மக்கள் ஏற்க தயாராக இல்லை..

ஷரியத் சட்டம்
தாலிபான்களின் பழமைவாத சிந்தாந்தங்களோடும், அவர்களின் அடக்குமுறைகளிலும் தங்களால் வாழ முடியாது என்று அவர்கள் வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.. இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி பெண்களுக்கு முழு உரிமை வழங்கப்படும் என்றும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் மட்டும் வேலை செய்ய பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என்றும் தாலிபன்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடியேதான் உள்ளனர்.

பெண் தொகுப்பாளர்கள்
ஆனால், நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களோ வேறுமாதிரியாக உள்ளது.. ஆப்கானிஸ்தான் அரசு ஊடகத்தில் வேலை பார்த்த கொண்டிருந்த பெண் நியூஸ் ரீடர்கள் மற்றும் செய்தியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்... அதற்கு பதிலாக தாலிபான் செய்தியாளர் அந்த பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்..

தாலிபான்கள்
காடிஜா அமினா என்ற மீடியா பெண்ணும் தற்போது பணியை இழந்துள்ளார்.. இதுகுறித்து அவர் சொல்லும்போது "இதுக்கு மேல என்ன இருக்கு? 20 வருஷம் என்னவெல்லாம் சாதிக்கப்பட்டதோ, அத்தனையும் போக போகிறது.. இனிமேல் வரும் தலைமுறையினருக்கு இங்கு எந்த வேலையும் கிடையாது.. தாலிபான்கள் தாலிபான்கள்தான்... வெறும் பேச்சுதான்.. அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை" என்கிறார் விரக்தியுடன்.

நிறுவனம்
இன்னொரு பாதிக்கப்பட்ட செய்தியாளர் பெயர் ஷப்னம் தவ்ரான்.. இவர் சொல்கிறார், "ஆர்டிஏ பஷ்டே என்று ஒரு செய்தி நிறுவனம்.. இது அரசு நடத்தும் நிறுவனம்.. இதில்தான் வேலைபார்த்து வந்தேன்.. தாலிபான்கள் பொறுப்புக்கு வந்து நாள், நான் ஆபீசுக்கு போயிருந்தேன்.. ஆனால், திடீர்னு என்னை வேலைக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. ஏன் என்று நான் கேட்டேன்.. அதற்கு, பெண்கள் இனி ஆர்டிஏவில் பணி செய்ய அனுமதி இல்லை என்றார்கள்.

பெண்கள்
உடனே நான் என்னுடைய அலுவலக அடையாள அட்டையை காட்டியும்கூட என்னை உள்ளே விடாமல், என்னை வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க.. தாலிபன்கள் ஆட்சி ஏற்றபோது, கடந்த 1995-ல் நடந்தமாதிரி நிலைமை இருக்காது, பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும்... பெண்கள் படிக்கலாம், வேலைக்கு போகலாம் என்றெல்லாம் சொன்னார்கள் .. நானும் நிஜமென்று நம்பினேன்.. சந்தோஷப்பட்டேன்...

கோரிக்கை
ஆனால், ஆபீசுக்கு போனபிறகுதான் நடைமுறை என்ன என்பதை புரிந்து உணர்ந்து கொண்டேன்.. தலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய இயக்குநரிடம் நான் உட்பட பாதிக்கப்பட்ட மற்ற பெண் பத்திரிகையாளர்களும் எங்கள் நிலையை எடுத்து சொல்லி பேசியிருக்கிறோம்... நாங்கள் தொடர்ந்து பணியில் இருப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.. பார்ப்போம்" என்கிறார்.. நாளுக்கு நாள் பெண்கள் மீதான உரிமைகள் பறிக்கப்பட்டு வருவது, அந்த நாட்டு மக்களுக்கு கவலையை தந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications