For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹவுடி மோடி.. எரிசக்தி நிறுவனங்களுடன் மோடி நடத்திய ஆலோசனை.. திரும்பி பார்க்கும் உலக நாடுகள்!

டெக்ஸாஸ் மாகாணத்தில் நடக்கும் ஹவுடி மோடி நிகழ்வை அடுத்து பிரதமர் மோடி இன்று எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    PM modi meeting with CEOs of top energy companies | மோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு

    டெக்ஸாஸ்: டெக்ஸாஸ் மாகாணத்தில் நடக்கும் ஹவுடி மோடி நிகழ்வை அடுத்து பிரதமர் மோடி இன்று எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் ஹவுடி மோடி விழா இன்று மாலை நடக்க உள்ளது. டெக்ஸாஸ் இந்தியா போரம் என்ற அமைப்பு மூலம் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிறநாட்டின் தலைவர் ஒருவருக்கு அமெரிக்காவில் நடக்கும் மிகப்பெரிய விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் சேர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எப்படி

    எப்படி

    இந்த விழாவை முன்னிட்டு அமெரிக்காவில் இருக்கும் இந்திய அமைப்புகள், சங்கங்கள் உடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு நடத்தினார். இன்று காலை அவர் ஹவுஸ்டன் நகரத்தில் இருக்கும் சீக்கியர்களின் சங்கத்துடன் சந்திப்பு நடத்தினார். அதன்பின் காஷ்மீர் பண்டிட்கள் உடன் சந்திப்பு நடத்தினார்.

    வேறு என்ன

    வேறு என்ன

    இந்த சந்திப்பு முடிந்த பின் பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் செய்யப்பட உள்ள முதலீடுகள் குறித்து இவர் ஆலோசனை செய்தற். சுமார் 1.30 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது.

    என்ன பேசினார்கள்

    என்ன பேசினார்கள்

    மின்னணு வாகன நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் உற்பத்தி நிறுவனங்கள், மாற்று எரிசக்தி நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டது. உலகின் முன்னணி நிறுவனங்களாக எமெர்சன், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு மிகவும் நன்றாக இருந்தது.

    விளக்கம்

    விளக்கம்

    பிரதமர் மோடி முக்கிய விஷயங்களை பேசினார். இந்தியாவில் விரைவில் நாங்கள் நிறைய முதலீடு செய்ய இருக்கிறோம். எங்கள் முதலீட்டிற்கு ஆதரவு அளிப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார் என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு உலக அளவில் பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    English summary
    Ahead of Howdy Modi meeting: PM holds a long meeting with Oil Sector CEOs in Houston.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X