காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி.. முயற்சியை முன்னெடுத்த இந்தியா! நெதன்யாகுவுடன் அஜித் தோவல் ஆலோசனை
டெல் அவிவ்: இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் 30000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிருடன் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு வரலாறு நெடுகிலும் இந்தியா தனது ஆதரவை தெரிவித்து வந்திருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம், பாலஸ்தீனத்தை விட இஸ்ரேலுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. இந்த விஷயம் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து இஸ்ரேல் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் வசம் இருக்கும் பணய கைதிகளை விடுவிப்பது, மனிதாபிமான உதவி உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையின்போது பேசப்பட்டிருக்கிறது. இதனையடுத்து விரைவில் இந்தியா, பாலஸ்தீன மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் தொடரும் என்று கூறியுள்ளார். இதற்கு அமெரிக்காவும் துணை போயுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாலிவுட் திரைப்படத்துறையை சேர்ந்த சுமார் 400 பேர் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் பிரபலங்கள் சிவப்பு நிற பேட்சை அணிந்து போர் நிறுத்தத்தை வலியுறுத்தியிருந்தனர்.
ஆனாலும், தற்போது வரை பைடன் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஏதும் வெளியிடவில்லை. இந்த போரில் இதுவரை 30,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது காசாவில் பஞ்சம் உருவாகியுள்ளது. பசியால் உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையை உடனடியாக மாற்ற போர் நிறுத்தம்தான் தீர்வு என்றும் ஐநா வலியுறுத்தியுள்ளது.
போர் நிறுத்தம் குறித்த தீர்மானங்களை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா கொண்டு வரும்போதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தள்ளுபடி செய்து வருகிறது. இப்படி இருக்கையில் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா முன்வந்திருப்பது உலக நாடுகளிடையே கவனம் பெற்றிருக்கிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications