Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரிக்கெட்டில் தோனி, ரேஸில் அஜித்.. ஒரே நாளில் கெத்து காட்டிய ”தல”.. 3வது இடத்தில் முடித்த AK

Subscribe to Oneindia Tamil

லிஸ்பன்: நடிகர் அஜித்குமார் கார் ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே துபாயில் நடந்த 24 மணி நேர கார் ரேஸிங்கில் அவரது அணி 3வது இடம் பிடித்திருந்தது. இதற்கிடையே இப்போது இத்தாலி நாட்டில் நடந்த ரேஸிலும் 3வது இடம் பிடித்து அஜித்குமார் ரேஸிங் சாதனை படைத்துள்ளது.

இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார்.. அவரது படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும் மாபெரும் ஓபனிங் கிடைக்கும். கடந்த பிப்ரவரி மாதம் அவரது நடிப்பில் விடாமுயற்சி ரிலீஸ் ஆன நிலையில், அடுத்து குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

Ajithkumar car racing finished third place in Italy 12H car race

அஜித் கார் ரேஸ்

சினிமா ஒரு பக்கம் என்றால் மற்றொருபுறம் ரேஸிங்கிலும் அஜித் சாதித்து வருகிறார். அவருக்கு கார் ரேஸில் தனி பிரியம் என்பது அனைவருக்கும் தெரியும். பல ஆண்டுகளுக்கு முன்பே கார் ரேஸிங்கில் சாதித்தவர் தான் அஜித். இருப்பினும், அப்போது ஏற்பட்ட காயத்தால் கார் ரேஸிங்கில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார். இதற்கிடையே இப்போது மீண்டும் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

அவர் இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் தனியாக கார் ரேசிங் டீமையும் ஆரம்பித்து இருந்தார். முதற்கட்டமாகக் கடந்த ஜனவரி மாதம் நடந்த 24 மணி நேர கார் ரேஸில் அவரது அணி பங்கேற்றது. அதில் மிகச் சிறப்பாக அஜித்குமார் ரேஸிங் அணி செயல்பட்ட நிலையில், 3வது இடத்தை பிடித்தது. துபாயை தொடர்ந்து பல்வேறு நகரங்களிலும் கார் ரேஸ் நடந்து வருகிறது.

இத்தாலி கார் ரேஸ்

அதில் தொடர்ச்சியாக அஜித் குமார் அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அதன்படி இப்போது இத்தாலி நாட்டில் நடந்த கார் ரேஸிங்கிலும் அஜித்குமார் அணி பங்கேற்றுள்ளது. இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற முகெல்லோ சர்க்யூட் (Mugello Circuit)இல் இந்த போட்டி நடந்தது. அதில் 12ஹெச், அதாவது 12 மணி நேரம் தொடர்ந்து கார் ஓட்டும் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. இதில் GT992 பிரிவில் அஜித் அணி களமிறங்கியது..

3வது இடம் பிடித்த அஜித்

இந்த ரேஸில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அஜித் குமார் ரேஸிங் அணி, அதில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளது.. துபாயைத் தொடர்ந்து இப்போது இத்தாலி சுற்றிலும் அஜித் குமார் ரேஸிங் அணி 3ம் பிடித்துள்ளது. பரிசு வாங்க மேடையேறிய அஜித், இந்தியக் கொடி உடன் சென்று பரிசை பெற்றார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குத் தொடர்ந்து பெருமை சேர்க்கும் வகையில் அஜித்குமார் செயல்பட்டு வரும் நிலையில், பலரும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இரண்டிலும் சாதிக்கும் தல!

இப்போது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. அதில் இன்று சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்டது. முதலில் மும்பை அணி பேட்டிங் செய்த நிலையில், சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். நூர் அகமது பந்து வீச அதைத் தல தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார். சூர்யகுமார் யாதவ் தனது பேட்டை சுழற்றி முடிப்பதற்குள், தோனி ஸ்டம்பிங் செய்திருந்தார். அவரது அந்த ஸ்டம்பிங்பை பார்த்து அரங்கமே அதிர்ந்தது.

இன்று கிரிக்கெட்டில் எப்பத தல தோனி கெத்து காட்டினாரோ, அதேபோல கார் ரேஸில் அஜித்குமார் கெத்து காட்டியுள்ளார். 12 மணி நேர கார் ரேஸில் எல்லாம் 3ம் இடம் பிடிப்பது அவ்வளவு ஈஸியான காரியம் இல்லை. ஆனாலும், சத்தமில்லாமல் சாதனை செய்து கெத்து காட்டியுள்ளார் அஜித்குமார்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+