சவுதியின் பொற்காலத்திற்கு முடிவு.. கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடம் பிடிக்கும் அமெரிக்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா இந்த வருடம் முதல் இடம் பிடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் எண்ணெய் உலகில் சவுதியின் பொற்காலம் முடிவுக்கு வரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவின் பல சாதனைகளில் ஒன்றாக இந்த சாதனையையும் கடந்து சென்று விட முடியாது. இந்த ஒரு விஷயம் தான் எண்ணெய் வள நாடுகளில் நிறைய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி வந்தது.

தற்போது இந்த எண்ணெய் உற்பத்தி சவுதி போன்ற நாட்டின் மொத்த அரசியலையும் அடியோடு மாற்றும். ஆனால் சவுதியின் செயல்பாடுகள் ஏற்கனவே அது இந்த மாற்றத்திற்கு தயாராகிவிட்டதை காட்டுகிறது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவுதிதான் முன்னிலை வகிக்கிறது. அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் 90 சதவிகித வருமானம் எண்ணெய் பொருட்கள் மூலம்தான் வருகிறது. அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் இதில் முன்னிலை வகிக்கிறது. 80 சதவிகித வருமானம் அந்த நாட்டிற்கு இதன் மூலம் கிடைக்கிறது. மேலும் ரஷ்யாவும் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

அமெரிக்கா உற்பத்தி

அமெரிக்கா உற்பத்தி

கடந்த 30 வருடமாக அமெரிக்காவும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்துதான் வருகிறது. கல்லூரியில் இருக்கும் கடைசி பென்ச் மாணவன் போல அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மதிப்பு 2016 வரை மிகவும் மோசமாகவே இருந்தது. 1975ல் இருந்து ரஷ்யாவும், சவுதியும் இதில் தனியாக சாம்ராஜ்யம் அமைத்து இருக்கிறது.

முதல் இடம் பிடிக்கும்

முதல் இடம் பிடிக்கும்

தற்போது நிலவரப்படி அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் வேகமாக அதிகரித்து இருக்கிறது. 2017ல் கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா அசுர வளர்ச்சி அடைந்தது என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த வருடம்தான் அமெரிக்காவின் முக்கிய வளர்ச்சியே இருக்கிறது. 2018 உற்பத்தி தற்போது இருப்பது போல் தொடர்ந்தால் அமெரிக்கா இதில் முதல் இடம் பிடித்தவிடும்.

சவுதி

சவுதி

இதனால் சவுதியின் பொருளாதாரம் இப்போதே பாதிக்க ஆரம்பித்துவிட்டது. அதன் காரணமாக சவுதி முதல்முறையாக அந்த நாட்டில் 'வாட்' வரி அறிமுகப்படுத்தி உள்ளது. அதேபோல் தியேட்டர் திறக்க ஒப்புதல் அளித்து இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்க சவுதி ஆகிறது. சவுதி அமெரிக்காவாகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
America will get First position in crude oil production in 2018. The report says that it will beat the Russia and Saudi in this year in the field of crude oil production. Since 1975 Saudi and Russia are the top most crude oil producers in the world.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற