ஆப்கன் தலைநகரில் அமெரிக்கா ராக்கெட் தாக்குதல்.. ஆயுதம் நிரம்பிய கார் அழிப்பு.. மீண்டும் பரபரப்பு
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் அருகே இன்று நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதை அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்கா நடத்திய இந்த ராக்கெட் தாக்குதலில் ஆயுதம் நிரம்பிய கார் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்து அங்கு மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர்.
இத்தனை விரைவாக காபூலை தாலிபான்கள் கைப்பற்றுவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் தற்போது தங்கள் நாட்டுக் குடிமக்களை வெளியேற்றும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காபூல் குண்டுவெடிப்பு
மேலும், தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அங்கிருந்து வெளியேறப் பல்லாயிரக்கணக்கான ஆப்கன் மக்களும் முயன்று வருகின்றனர். இதனால், காபூல் விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக் கணக்கான மக்கள் கூடியுள்ளனர். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கு நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அமெரிக்கப் படை வீரர்கள் 13 பேரும் இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர்.

ராக்கெட் தாக்குதல்
இந்தச் சூழலில் இன்று மாலை ஆப்கன் தலைநகர் காபூல் அருகே மீண்டும் பலமான சத்தத்துடன் குண்டுவெடித்ததாகத் தகவல் வெளியானது. முதலில் குண்டுவெடிப்பு தாக்குதல் எனச் சொல்லப்பட்ட நிலையில், அதன் பின்னரே அது ராக்கெட் தாக்குதல் எனத் தெரிய வந்தது. காபூலில் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள பகுதியில் நடந்த ராக்கெட் தாக்குதல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்த வீடு ஒன்றை ராக்கெட் தாக்கியுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சதிச்செயல் முறியடிப்பு
இந்நிலையில், இந்த ராக்கெட் தாக்குதலை நடத்தியது அமெரிக்கா என தெரியவந்துள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலில் ஆயுதம் நிரம்பிய கார் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தாலிபான்களும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கார் வெடிகுண்டு நிரம்பிய கார் அழிக்கப்பட்டதாகவும் காபூல் விமான நிலையத்தில் மற்றொரு தாக்குதலை இந்த கார் மூலம் நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த ராக்கெட் தாக்குதலில் 3 பேர் வரை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது முன்னதாக இந்த ராக்கெட் தாக்குதலில் குழந்தை ஒன்று உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், அமெரிக்கா மற்றும் தாலிபான்கள் நிலைமையை விளக்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அதிபர் பைடன்
முன்னதாக காபூல் விமான நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நம்பகமான தகவல் வந்ததுள்ளதால் காபூல் விமான நிலையத்தில் இருந்தும் பொது இடங்களில் இருந்தும் அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பைடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications