For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாயகம் திரும்ப முடியாத சிவகங்கை காளிமுத்துவுக்கு பஹ்ரைனில் உதவிய அன்னை தமிழ் மன்றம்!

Google Oneindia Tamil News

பஹ்ரைன்: தமிழகத்தைச் சேர்ந்தவர் விபத்தில் சிக்கி 3ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தவரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவருக்கு தேவையான உதவிகளையும் சிகிச்சைகளையும் மேற்கொண்டுள்ளது பஹ்ரைனில் உள்ள அன்னை தமிழ் மன்றம்.

தமிழகத்தில் சிவகங்கையைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் பஹ்ரைனில் கடந்த சில வருடங்களாக வேலை செய்து வந்தவர். ஒரு விபத்தில் சிக்கிய இவர் தான் வேலை செய்து கொண்டிருந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து, சுயநினைவின்றி, சல்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 Annai Tamil Mandram helps Sivagangais worker

இந்த சூழ்நிலையில் இவர் தனது குடும்பத்தினரோடு தொடர்பு கொள்ளாத காரணத்தால், இவரது மனைவி, பஹ்ரைனில் இயங்கி வரும் அன்னை தமிழ் மன்றத்தின் நிர்வாகிகளுக்குத் தொடர்பு கொண்டு வேண்டுகோள் வைத்ததின் பேரில் இவரைக் குறித்த விஷயங்கள் ஆராயப்பட்டன.

இந்த நிலையில், இவருக்கு எதிராக இவர் முன்பு வேலை செய்த நிறுவனம் வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் இவர் பஹ்ரைன் தினார் 5,200 (இந்திய மதிப்பில் சுமார் பத்து லட்சம் ரூபாய்) செலுத்தினால் மட்டுமே ஊருக்குச் செல்ல முடியும் என்ற நிலையில் இவருக்கு பயணத்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த விஷயங்களை அன்னை தமிழ் மன்றம், இந்திய தூதரகத்திற்கும் சுதீர் திருநிலத்திற்கும் தெரிவித்ததோடு, இந்தியாவின் பிரதமர் அலுவலகத்திற்கும், தமிழக முதல்வர் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தது.

அதன்பேரில், இந்தியாவிற்கான பஹ்ரைன் தூதரகத்தின் தூதுவர் பியூஷ் ஸ்ரீவத்சவாவின் முன்னெடுப்பு மற்றும், பிரவாசி லீகல் பஹ்ரைன் ஹெட் சுதீர் திருநிலத்தின் முழுமையான முயற்சி காரணமாக இவரது வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இறுதியாக, இவருக்கு எல்லா வகையான பயண ஆவணங்களும் தயார் செய்யப்பட்டன.

மே மாதம் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் பஹ்ரைன் சல்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள்முதல் இவருக்கு கீழ்க்காணும் அமைப்புகளும் அதிகாரிகளும், தனி நபர்களுமாக அநேகர் உதவிக்கரம் நீட்டினார்கள்.

 Annai Tamil Mandram helps Sivagangais worker

அவர்கள் விபரங்களாவன:
1. இந்தியத் தூதரகத்தின் தூதுவர் பியூஷ் ஸ்ரீவத்ஸவா மற்றும் அதிகாரிகள்
2. சுதீர் திருநிலத் (ப்ரவாசி லீகல் ஹெட்-பஹ்ரைன்)
3. பாரதப்பிரதமர் அலுவலகம் (இந்தியா)
4. முதலமைச்சர் அலுவலகம் (தமிழ்நாடு)
5. சல்மானியா மருத்துவமனை நிர்வாகம்
6. பஹ்ரைன் அன்னை தமிழ் மன்ற நிர்வாகிகள்
7. இயேசு ஆறுதல் தருகிறார் ஊழியர்கள்
8. பஹ்ரைன் குடியுரிமை அமைச்சகத்தின் இயக்குநர் யூசுஃப் ஜமால் அவர்கள்
9. அருள்தாஸ் மற்றும் ஐ.சி.ஆர்.எஃப் அமைப்பு
10. பஹ்ரைன் சீக்கிய குருத்துவார் குழுவினர்
11. அல் ஹிலால் மருத்துவமனை
12. பொன்னுச்சாமி
இன்னும் அனேகரின் பங்களிப்பு இவருக்கு உறுதுணையாக இருந்தது.

 Annai Tamil Mandram helps Sivagangais worker

விதைகளின் உரமாய்
அன்னை தமிழ் மன்றம்
பஹ்ரைன்.

English summary
Annai Tamil Mandram helps Sivagangai's worker.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X