For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷாரன் மரணம்

By Siva
Google Oneindia Tamil News

Ariel Sharon, former PM of Israel, dies at age 85
ஜெருசலம்: இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷாரன் தனது 85வது வயதில் மரணம் அடைந்தார்.

இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷாரனுக்கு பதவியில் இருந்தபோது பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 8 ஆண்டுகளாக கோமாவில் இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது நுரையீரல், சிறுநீரகங்கள் என்று முக்கிய உறுப்புகள் செயல் இழக்கத் துவங்கின.

இதையடுத்து டெல் அவிவ் அருகே உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஷாரன் நேற்று காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் கடந்த 2000ம் ஆண்டு மரணம் அடைந்த அவரது மனைவி லில்லியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான நெகெவ் ரான்ச்சில் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறது.

பயமில்லாமல் செயல்பட்டதால் அவரை இஸ்ரேல் மக்கள் 'தி புல்டோசர்' என்று அழைத்து வந்தனர். 1982ம் ஆண்டு இஸ்ரேல் லெபனானின் மீடு படையெடுத்தபோது அதற்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஷாரன் தான் என்பது குறிப்பிடத்தக்கத்து.

English summary
Former Israeli PM Ariel Sharon passed away aged 85 at a hospital near Tel Aviv on saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X