"ராக்கி" பிறந்தநாள் விழாவில் அர்னால்டு தாத்தா போட்ட குத்தாட்டம்
ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சக நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டோலனுடன் இணைன்ந்து நடனமாடும் வீடியோ வைரலாக பரவிவருகிறது.
Recommended Video

கலிபோர்னியா: ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னெகர், நடிகர் சில்வெர்ஸ்டார் ஸ்டோலனுடன் சேர்ந்து ஹுலா நடனம் ஆடும் காட்சிகள் வைரலாக பரவிவருகிறது.
உலக அளவில் பாடி பில்டிங்கில் கவனம் செலுத்துபவர்கள் எல்லோருக்கும் மானசீககுருவாக திகழ்பவர் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்னெகர். சிறந்த பாடி பில்டர்.
15 வயதில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து 20 வது வயதில் உலக ஆண் அழகன் பட்டம் வென்று அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். அதன்பிறகு ஹாலிவுட் சினிமா அவரை செல்லப்பிள்ளையாக தத்தெடுத்துக்கொண்டது.

ரியல் டெர்மினேட்டர்
கமாண்டோ, கொனான் தி பார்பேரியன், ட்ரூ லைஸ், டெர்மினேட்டர் சீரீஸ், ப்ரிடேட்டர் என அர்னால்டின் சாகசங்களை சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது 70வது அகவையில் வீர நடைபோடும் அர்னால்ட், இப்போதும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை தவறாது கடைபிடித்து வருகிறார். ஐ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்தபோது நட்சத்திர விடுதியில் உடற்பயிற்சி செய்துவிட்டு நம்ம ஊர் தோசையை விரும்பி சாப்பிட்டது நினைவிருக்கலாம்.
|
பிறந்தநாள்:
ராக்கி என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டோலன். எக்ஸ்பாண்டபில்ஸ், எஸ்கேப் ப்ளான் உள்பட பல படங்களில் அசத்தி, தற்போது ராம்போ-5 ல் நடித்துக்கொண்டிருக்கிறார். ஸ்டோலன் தன்னுடைய 72 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதில் கலந்துகொண்ட நடிகர் அர்னால்ட், விழாவை சிறப்பிக்கும் விதமாக சக ஹாலிவுட் நடிகரான சில்வெர்ஸ்டார் ஸ்டோலனுடன் இணைந்து ஹுலா நடனம் ஆடியுள்ளார்.

குத்தாட்டம்:
நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டோலனுடன் சேர்ந்து வாயில் சிகாரை வைத்தபடியே இருவரும் ஹுலா நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அர்னால்டு, ராக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி, நீங்க அற்புதமான நண்பர், மிகச்சிறந்த ஹூலா டான்சர் ஆனால் என்னை விட மூத்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று குறும்புத்தனமாக பதிவிட்டுள்ளார்.

நண்பேண்டா:
ஹாலிவுட்டின் மனம் கவர்ந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களின் ஒற்றுமை மற்றும் கொண்டாட்டமான இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நட்புக்கு இலக்கணம் இவர்கள் தான் என்று கூறி வைரலாக்கி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications