முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்: தீவிரவாதி ஹபீஸ் சயீத் சவால்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காஷ்மீரின் விடுதலைக்காக வாக்குறுதி அளித்தால் நவாஸ் ஷரீபை பிரதமராக்க முயற்சி - ஹபீஸ் சயீத்

  லாகூர்: முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அரசுக்கு சவால் விட்டுள்ளார்.

  மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியும், தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

  Arrest me if you can: Hafiz Saeed dares Pakistan government

  அப்போது அவர் கூறியதாவது,

  பாகிஸ்தான் அரசு என்னை கைது செய்ய விரும்பினால் செய்யட்டும். முடிந்தால் என்னை கைது செய்யட்டும். ஆனால் அதற்காக நான் காஷ்மீர் மக்களுக்காக போராடுவதை நிறுத்த மாட்டேன்.

  எங்களை அடக்க நினைத்தால் மேலும் பலத்தோடு மீண்டு வருவோம். காஷ்மீரின் விடுதலைக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தால் நவாஸ் ஷரீபை மீண்டும் பிரதமராக்க முயற்சி செய்வோம்.

  சர்வதேச கண்காணிப்பு குழுக்கள் எங்கள் மையங்களுக்கு வந்து நாங்கள் செய்யும் தான, தர்மங்களை பார்க்கலாம் என்றார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Outlawed Jamaat-ud-Dawa (JuD) chief and Mumbai terror attack mastermind Hafiz Saeed on Monday dared the Pakistani government to arrest him if it can and said he would not stop fighting the case of Kashmiri people.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற