For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐயோ.. கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா? - ஊடகங்கள் பரபரப்பு விவாதம்

Google Oneindia Tamil News

ஜெர்மனி: ஆஸ்ட்ராஜெனேகா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஜெர்மனி அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே கொடுக்கப்பட்ட பிரபல மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அரசு சந்தேகம் எழுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு ஆஸ்ட்ராஜெனேகா மறுப்பு தெரிவித்துள்ளது.

AstraZeneca Rejects Reports On Covid Jab Efficacy raised by germany

Handelsblatt economic daily அறிக்கையின்படி, 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே கொடுக்கப்பட்ட Jab-ன் (ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்து) செயல்திறன் வெறும் 8 சதவிகிதம் மட்டுமே உள்ளது என்று பெர்லின் மதிப்பிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த தகவலை மறுத்துள்ள ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம், "65 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செயல்திறன் 8% வரை குறைவாக இருப்பதாக வெளியான அறிக்கைகள் முற்றிலும் தவறானவை" என்று கூறியுள்ளது.

மேலும், பிரபல மருத்துவ இதழான 'The Lancet'-ல் வெளியிடப்பட்ட தகவலின் படி, வயதானவர்கள் எங்கள் தடுப்பூசிக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டினர். குறிப்பாக, வயதானவர்களிடையே இரண்டாவது டோஸுக்குப் பிறகு 100 சதவீதம் spike-specific antibodies உருவாக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கோவிட் -19 தடுப்பூசியின் மில்லியன் கணக்கான அளவு டோஸ்கள் கிடைக்கப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து, ஐரோப்பிய யூனியன் அஸ்ட்ராஜெனேகாவிடம் தனது அதிருப்தியை சற்று காட்டமாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Here the shock reports on AstraZeneca by Germany
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X