For Daily Alerts
Just In
செனகலில் புலம்பெயர்ந்தவர்களின் படகு கடலில் மூழ்கியதில் 140 பேர் பலி
டாகர்: செனகலின் எம்பூரில் இருந்து கேனரி தீவுகள் நோக்கி சென்ற புலம்பெயர்ந்தோர் படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியதில் 140 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி தீவுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வோர் எண்ணிக்கை தொடர் கதையாகி வருகிறது. அதுவும் நடப்பாண்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புலபெயர்ந்துள்ளனர்.

இப்படி புலம்பெயர்ந்தவர்கள் சனிக்கிழமையன்று எம்பூரில் இருந்து கேனரி தீவுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் படகு திடீரென தீப்பிடித்து மூழ்கியது.
இதில் படலில் பயணம் செய்த 140 பேர் மூழ்கி உயிரிழந்தனர். 59 பேர் பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டனர்.