For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் ரூ. 2,066 கோடிக்கு விற்பனையான யு.கே. அளவிலான நிலம்

By Siva
Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலம் ரூ. 2,066 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

1857ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த சர் சிட்னி கிட்மேன் 13 வயதில் வீட்டை விட்டு ஓடி பெரும் பணக்காரர் ஆனார். அவர் துவங்கிய எஸ். கிட்மேன் அன்ட் கம்பெனிக்கு சொந்தமாக ஏராளமான நிலம் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் 1 லட்சத்து ஆயிரத்து 411 சதுர கிலோமீட்டர் அளவிலான நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Australian land the size of England hits market for $325 million

இங்கிலாந்து நாட்டின் அளவிலான அந்த நிலத்தில் ஆடு மேய்க்கும் 150 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள். அந்த நிலத்தை வாங்க 30 பேர் போட்டியிட்டனர். அதில் ஒருவர்

நிலத்தை வாங்கியுள்ளார். நிலத்தை வாங்கியவரின் விவரம் வெளியிடப்படவில்லை.

ஐந்து தலைமுறைகளாக கிட்மேன் குடும்பத்திடம் இருந்த அந்த நிலம் ரூ. 2 ஆயிரத்து 66 கோடியே 11 லட்சத்து 13 ஆயிரத்து 929க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நிலத்தை விற்க கிட்மேன் குடும்பத்தார் விரும்பவில்லை என்றும், அதை பிரித்து எடுத்துக் கொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் கூறப்பட்டது.

இறுதியில் நிலத்தை விற்பது என கிட்மேன் குடும்பத்தார் முடிவு செய்து அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

இதுவரை உலகில் நடந்துள்ள மிகப்பெரிய நில விற்பனை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
101,411 square kilometre land in Australia has been sold for a record price of Rs. 20,661,113,929. This is the biggest property sale on earth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X