For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காபி ஷாப்பில் உடைந்த காதல்..காதலர்களின் சண்டையை டிவிட்டரில் 'லைவ்' செய்த எழுத்தாளர்!

Google Oneindia Tamil News

டோரன்டோ: கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் தவே பித்னி, தான் ஹோட்டலுக்குப் போயிருந்தபோது அங்கு ஒரு காதல் ஜோடிக்கு இடையே நடந்த சண்டை, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், கடைசியில் அவர்கள் பிரிந்து போனது ஆகியவற்றை ஒரு விஷயம் விடாமல் நேரடியாக டிவிட் செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

காபி ஷாப்பில் நடந்த களேபரக் காதல் சண்டை இது. வழக்கமாக இது போன்ற சண்டை நடந்தால் நாமெல்லாம் என்ன செய்வோம்.. ரெண்டு காதையும் எக்ஸ்டென்ட் செய்து ஒட்டுக் கேட்போம்.. ஆனால் இதுதான் கம்ப்யூட்டர் காலமாச்சே.. எனவே, பித்னி தான் ஒட்டுக் கேட்டதை அப்படியே டிவிட் செய்து ஊருக்கே பரப்பி விட்டார்.

ஒரு வரி விடாமல் அந்த காதல் சண்டையை மெனக்கெட்டு உட்கார்ந்து டிவிட் மேல் டிவிட் செய்து காதல் சண்டையை உலகம் முழுதும் பரப்பியுள்ளார் இந்த பித்னி.

12 புத்தகம் எழுதியவர்

12 புத்தகம் எழுதியவர்

இந்த பித்னி இதுவரை 12 நூல்களை எழுதியுள்ளார். காலம்னிஸ்ட்டாகவும் இருக்கிறார்.

கடைக்கு வந்தது முதல்

கடைக்கு வந்தது முதல்

இவர் காபி ஷாப்புக்குப் போயுள்ளார். அப்போது ஒரு இளம் காதல் ஜோடி வந்துள்ளது. அவர்கள் கடைக்குள் நுழைந்தது முதல் கிளம்பிச் செல்லும் வரை நடந்ததை டிவிட் செய்துள்ளார்.

சூடான வாதம்

சூடான வாதம்

இருவருக்கும் இடையே நடந்த சூடான வாதம், சின்னச் சின்ன கிசுகிசுப்புப் பேச்சுக்கள். கோபம், அமைதி என அவர்களிடம் தென்பட்ட எதையும் விடாமல் வரிக்கு வரி டிவிட் செய்துள்ளார்.

உடைந்து போன காதலன்

உடைந்து போன காதலன்

இந்த சண்டையின் முடிவில் அந்தப் பெண் மட்டும் கோபத்துடன் கிளம்பிப் போய் வி்ட்டார். அவர் காதலை முறித்து விட்டுப் போனதால் அந்த காதலன் எந்த அளவுக்கு உடைந்து போய் உட்கார்ந்திருந்தான் என்பதையும் டிவிட்டில் வர்ணித்துள்ளார் பித்னி.

எல்லாஞ்சரி.. இப்படிச் செய்யலாமா...

எல்லாஞ்சரி.. இப்படிச் செய்யலாமா...

எல்லாம் சரிதான். ஆனால் ஒரு பொது இடத்தில் ஒரு ஜோடிக்கு இடையே நடந்த அந்தரங்கமான விஷயத்தை இப்படி ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதிலும் ஒரு பிரபலமா எழுத்தாளர் இப்படிச் செய்தது சரியா என்று சிலர் கேட்கின்றனர்.

English summary
You are at a coffee shop. There is a couple next to you obviously distressed about something. With a rising sense of disquiet you realise the couple is having their last conversation together. They are breaking up. Faced with a situation such as this, what would you do? Author Dave Bidini decided to live tweet the entire thing in a series of heartbreaking posts that stop short at being cavalier and actually bring out the discomfort of a neutral observer being forced to witness a very intimate scene at a public place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X