For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவ உலகில் அதிசயம்: பனிக்குடத்துடன் பிறந்த குழந்தை

By Siva
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்காவில் ஆண் குழந்தை ஒன்று பனிக்குடத்துடன் பிறந்த அதிசயம் நடந்துள்ளது.

பெண் கருத்தரித்தவுடன் குழந்தை பனிக்குடத்திற்குள் தான் வளரும். பிரசவ வலி எடுக்கும்போது பனிக்குடம் உடைந்து குழந்தை வெளியே வரும். இந்நிலையில் தான் அமெரிக்காவில் குழந்தை ஒன்று பனிக்குடத்துடனேயே பிறந்துள்ளது.

Baby born completely encased in amniotic sac

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் செல்சீ. 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் கலிபோர்னியாவில் உள்ள செடார்ஸ்-சினாய் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு சிலாஸ் பிலிப்ஸ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் அதுவும் குறை மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் குழந்தை பனிக்குடம் உடையாமலேயே பிறந்துள்ளது. 80,000 குழந்தைகளில் ஒன்று தான் பனிக்குடத்துடன் பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு மெல்லிய பைக்குள் குழந்தை இருப்பதை பார்த்த மருத்துவர்கள் இது மருத்துவ உலகின் அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிலிப்ஸ் பனிக்குடத்திற்குள் கை, கால்களை மடக்கி இருந்ததை பார்க்கவே வியப்பாக இருந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
A premature baby was born inside the amniotic sac in California.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X