சீன "டிராகன்" போடும் அரசியல் கணக்கு.. வங்கதேசம் மூலம் இந்தியாவுக்கு வைக்கப்படும் செக்?

Subscribe to Oneindia Tamil

டாக்கா: இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையேயான உறவு கடந்த சில காலமாகவே மோசமடைந்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்தச் சூழலில் திடீரென வங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது இந்த திடீர் சீன பயணம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு மெசேஜாகவே பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு அங்கு இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றுள்ளார். இத்தனை காலம் இந்தியா உடன் வங்கதேசத்திற்கு நல்லுறவு இருந்த நிலையில், இப்போது அது மாறத்தொடங்கியுள்ளது. இதற்கிடையே வங்கதேசத்தில் நடக்கும் சில விஷயங்கள் இப்போது சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Bangladesh Chief Advisor Muhammad Yunus visit to China A message to India

சீனாவுக்குப் புறப்பட்ட முகமது யூனுஸ்

அதாவது வங்கதேச தலைநகர் டாக்காவில் சுதந்திரம் மற்றும் தேசிய தினத்தன்று வங்கதேசத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. அதில் அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி முடிந்த கொஞ்ச நேரத்திலேயே தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சிறப்பு விமானம் மூலம் சீனாவுக்குச் சென்றுள்ளார்.

ஒரு பக்கம் இந்தியா வங்கதேச உறவு மோசமடைந்து வரும் சூழலில், திடீரென வங்கதேச அரசின் ஆலோசகர் சீனா சென்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இதை ஒரு தற்செயலான நிகழ்வு என்றும் நாம் கடந்து சென்றுவிட முடியாது. இது இந்தியாவுக்கான வங்கதேசத்தின் ஒரு மெசஜ்ஜாகவே பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பரஸ்பர உறவு தேவை என இந்தியா கூறிய நிலையில், அவர் சீனாவுக்குப் புறப்பட்டுள்ளார்.

உடன் செல்லும் பெரிய டீம்

முகமது யூனுஸ் இடைக்கால அரசின் ஆலோசகராகப் பதவியேற்ற பிறகு அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு இருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது அவர் சீனாவுக்குப் போய் இருக்கிறார். ஆனால், இந்த முறை அவர் தனியாகச் செல்லவில்லை. வெளியுறவு, மின்சாரம், எரிசக்தி, கனிமங்கள்; சாலைப் போக்குவரத்து மற்றும் பாலங்கள்; மற்றும் ரயில்வே துறை வல்லுநர்கள் என்று தன்னுடன் ஒரு டீமையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்த பயணத்தில் அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கையும் சந்திக்க இருக்கிறார்.

அதேநேரம் முகமது யூனுஸ் சீனாவுக்கு முன்பு இந்தியாவுக்குத் தான் வர விரும்பினாராம். ஆனால், இங்கிருந்து பாசிட்டிவான பதில் கிடைக்காததாலேயே அவர் சீனா செல்ல முடிவு செய்ததாக அவரது பத்திரிகைச் செயலாளர் கூறியதாக ஆங்கில செய்தி நிறுவனமான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது..

கவனிக்க வேண்டிய விஷயம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முகமது யூனுஸ் எந்தவொரு கமர்ஷியல் விமானத்திலும் சீனா செல்லவில்லை.. சீனா தங்களின் சொந்த விமானத்தை அனுப்பிய நிலையில், அதில் தான் முகமது யூனுஸ் புறப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

சீனாவும் கூட வங்கதேச இடைக்கால தலைவரின் வருகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இது தொடர்பாகச் சீனத் தூதர் யாவ் வென் கூறுகையில், "கடந்த 50 ஆண்டுகளில் ஒரு வங்கதேச தலைவரின் மிக முக்கியமான பயணம்" என்று என்று குறிப்பிட்டார். முகமது யூனுஸ் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார். பல முக்கிய மீட்டிங்குகள் நடக்க இருக்கிறது.

அதிகரிக்கும் சீன முதலீடுகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பைத் தாண்டியும், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். குறிப்பாகச் சீன நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை முகமது யூனுஸ் சந்திக்க உள்ளார். பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மேலும், அங்கு அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்படுகிறது. வங்கதேசத்தில் முதலீட்டை ஈர்க்க ஹைடெக் பூங்காக்கள் உள்ளிட்ட நிறுவனங்களையும் யூனுஸ் பார்வையிடுகிறார்..

ஏற்கனவே வங்கதேசத்தின் மிகப் பெரிய வர்த்தக பார்ட்னராகவும் முக்கிய முதலீட்டாளராகவும் சீனா இருக்கிறது. இந்தச் சூழலில் யூனுஸின் இந்த பயன் இரு தரப்பு உறவை மேலும் ஆழப்படுத்துவதாகவே இருக்கிறது. யூனுஸ் பொறுப்பேற்றதிலிருந்து குறைந்தது 14 சீன நிறுவனங்கள் 230 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வங்கதேசத்தில் முதலீடு செய்துள்ளது. உண்மையில் சீனாவின் செல்வாக்கு வங்கதேசத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்தியாவுக்கு செக்?

மேற்கத்திய நாடுகளின் உதவி குறைந்து, இந்தியாவுடனான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், தக்க நேரத்தில் சீனா உள்ளே புகுந்துள்ளது. சீனா தனது பொருளாதார மண்டலமாக வங்கதேசத்தை மாற்ற முயல்கிறது. வங்கதேசத்தின் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனாவின் ஈடுபாடு அதிகரிப்பது, இந்தியாவிற்குக் கவலையையே ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+