For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர்களிலேயே ஒபாமாதான் மோசம்- கருத்து கணிப்பில் மக்கள் சொல்கிறார்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்காவில் பதவிக்கு வந்த அதிபர்களில் ஒபாமாதான் மிகவும் மோசம் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. பொருளாதாரம், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியற்றதன்மை போன்றவற்றால் ஒபாமா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

அமெரிக்க அதிபராக பதவி வகித்துவருபவர் ஜனநாயக கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா. இன்னும் இரு ஆண்டுகளில் அந்த நாட்டில் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபற உள்ளது. இந்த சூழ்நிலையில், 2ம் உலகப்போருக்கு பிறகு பொறுப்பேற்ற, அமெரிக்க அதிபர்களின் செயல்பாடுகள் குறித்து குயினிபியாக் பல்கலைக்கழகம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

ரொனால்ட் ரீகனுக்கு முதலிடம்

ரொனால்ட் ரீகனுக்கு முதலிடம்

அந்த கருத்துக் கணிப்பில், ரொனால்ட் ரீகன்தான் சிறந்த அதிபர் என்று 35 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மோனிகா புகழ் கிளிண்டர் சூப்பராமே..!

மோனிகா புகழ் கிளிண்டர் சூப்பராமே..!

மோனிகாவுடன் சல்லாபம் செய்து சர்ச்சையை கிளப்பிய பில் கிளிண்டன் நல்ல அதிபர் என்று 18 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஜான் கென்னடிக்கும் கவுரவம்

ஜான் கென்னடிக்கும் கவுரவம்

உலக மக்கள் பலருக்கும் மிகவும் அறிமுகமான ஜான் எப்.கென்னடிதான் சிறந்த அதிபர் என்று அமெரிக்காவின் 15 விழுக்காடு மக்கள் தெரிவித்துள்ளனர்.

புஷ் பரவாயில்லை..

புஷ் பரவாயில்லை..

ஜார்ஜ் டபிள்யூ.புஷ் ஆட்சி காலத்தைவிட, ஒபாமா சிறந்த ஆட்சி அளித்துள்ளார் என்று ஒப்பீட்டளவில் 39 சதவீதம் பேர் பாராட்டியுள்ளனர். அதே நேரம் 40 சதவீதம்பேர் புஷ்தான், ஒபாமாவைவிட ஒருபடி உயர்ந்தவர் என்று கூறியுள்ளனர்.

ஒபாமா மோசம்

ஒபாமா மோசம்

2ம் உலக போருக்கு பிறகு அமெரிக்காவின் அதிபரானவர்களில், ஒபாமாதான் மிகவும் மோசம் என்று 33 சதவீத அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ். இவரை மோசம் என்று 28 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதான் காரணம்..

இதுதான் காரணம்..

இதுதான் காரணம்..

பொருளாதார சரிவை மீட்காதது, வேலைவாய்ப்பு பிரச்சினையை சரி செய்யாதது, தீவிரவாதத்துக்கு எதிராக அதிரடியான நிலைப்பாட்டை எடுக்காதது போன்றவை ஒபாமா மீதான மக்கள் கோபத்துக்கு காரணம் என்று அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

English summary
Obama is the worst US President since World War II, 33 per cent of Americans have said in a new poll released today which gave negative grades for him for his handling of key issues like the economy, foreign policy, terrorism, healthcare and environment according to the Quinnipiac University National Poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X