For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீப்பாய் குண்டுவீச்சு.. சிரியாவில் 15 பேர் பலி: 10 பேர் படுகாயம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெய்ரூட்: சிரியாவில் விமானத்தில் இருந்து 'பேரல் பாம்' எனப்படும் பீப்பாய் குண்டுகள் வீசப்பட்டதில் சுமார் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஈராக், சிரியாவில் போரில் குதித்தன. குர்திஸ்தான் படையினரும் துருக்கியும் அமெரிக்காவுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

Barrel Bomb attacked 15 killes in Syria

இந்நிலையில் விமானங்களில் இருந்து போடப்பட்ட பீப்பாய் வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் பொதுமக்கள் சுமார் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகயாமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

'பேரல் பாம்' உலோக பீப்பாயில் கச்சா எண்ணெய், நச்சு ரசாயனம், வெடி மருந்து, தலையற்ற கூர் ஆணிகள், உலோக துண்டுகள் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். பின், பீப்பாய் 'சீல்' செய்யப்பட்டு, ஹெலிகாப்டர் அல்லது விமானம் மூலம் வானில் இருந்து போடப்படும். பீப்பாய் கீழே விழுந்ததும், உள்ளிருக்கும் வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும். உலோக துண்டுகள் ஆணிகள் ஆகியவை, நாலாபுறமும் பாய்ந்து, மனிதர்களை தாக்கும். இத்தகைய பீப்பாய் குண்டு தாக்குதல் தான் கிழக்கு சிரியாவின் மாடி நகரில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அண்டை மாகாணமான பாப் அல் நைராப்பில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த கூடாரம் அருகே முதல் பீப்பாய் வெடிகுண்டு போடப்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து அங்கு வந்த ஆம்புலன்ஸை பொதுமக்கள் சூழ்ந்திருந்த பொது இரண்டாவது பீப்பாய் வெடிகுண்டு போடப்பட்டதாகவும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டாவது வெடிகுண்டு தாக்குதலில் தான் அதிகளவில் உயிரிழப்பு நிகழ்ந்ததாகவும், அந்த தாக்குதலில் ஆம்புலன்ஸ் ஒன்று முற்றிலும் சேதமடைந்ததாகவும் அக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வான்வழித் தாக்குதலில் சிக்கி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒம்ரான் என்ற சிறுவன் தனது உடல் முழுவதும் ரத்த வழிந்தோடிய நிலையில் ஆம்புலன்ஸில் அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் வெளியான நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
At least 15 civilians are killed in a barrel bomb attack on a rebel-held district of Syria's Aleppo city, the Syrian Observatory for Human Rights said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X